கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்..!

Natural Bath Powder

Natural Bath Powder

இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் மாசு, ஆரோக்கியமற்ற உணவுகள், வெயிலின் அதிக தாக்கம் போன்ற பல பிரச்சனைகளால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது, முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், பருக்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும். இதனை சரி செய்ய நாம் கடைகளில் விற்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அந்தவகையில் சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கருத்து போன முகத்தை எப்படி பளப்பளப்பாக மாற்றுவது என்பதை தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Homemade Bath Powder For Skin Whitening in Tamil:

Homemade Bath Powder Ingredients:

  • பச்சரிசி- 2 ஸ்பூன்
  • வெள்ளை உளுந்து- 2 ஸ்பூன்
  • கோதுமை மாவு- 2 ஸ்பூன்

How To Make Natural Bath Powder at Home in Tamil:

 அரிசி மாவு முகம் வெள்ளையாக

முதலில் ஒரு ஈரப்பதம் இல்லாத மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதில் பச்சரிசி மற்றும் வெள்ளை உளுந்து சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது இதில் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் சேர்த்து மூடி வைத்து கொள்ளுங்கள்.

இதனை நீங்கள் குளிக்கும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

 homemade bath powder for skin whitening in tamil

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..  ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..

How to Use Bath Powder in Tamil:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு தயாரித்து வைத்த குளியல் பொடியை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

 natural bath powder in tamil

இப்போது இப்பேஸ்டினை குளிப்பதற்கு முன், உங்கள் முகம், கை, கால் போன்ற பகுதிகளில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்து, 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு நன்றாக கழுவுங்கள்.

இந்த குளியல் பவுடரை நீங்கள் குளிக்கும்போது மட்டுமில்லாமல் முகம் கழுவும் போதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் சருமம் வெண்மையாவதை நீங்களே உணர்வீர்கள்.

வால் மாதிரி இருக்கிற முடியை அடர்த்தியாக வளர வைக்க வேண்டுமா..  அப்போ இந்த ஹேர் பேக் யூஸ் பண்ணுங்க..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil