வால் மாதிரி இருக்கிற முடியை அடர்த்தியாக வளர வைக்க வேண்டுமா..?அப்போ இந்த ஹேர் பேக் யூஸ் பண்ணுங்க..!

Advertisement

 Natural Hair Packs For Thick Hair in Tamil

பெண்கள் அனைவருக்கும் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும். எனவே அவர்கள் முடிய அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்க்க கடைகளில் விற்கும் எண்ணெய், ஷாம்பு போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவற்றில் அவ்வளவு பயன்கள் இருக்காது. எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முடியை எப்படி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைப்பது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது இயற்கையான ஹேர் பேக் தயாரிக்கும் முறையை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Homemade Hair Pack for Thick Hair in Tamil:

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • ஆளி விதை- 4 ஸ்பூன்
  • வெந்தயம்- 3 ஸ்பூன்

ஹேர் பேக் செய்யும் முறை:

ஸ்டேப் -1

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீர் சூடானதும் அதில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

 hair pack for hair growth homemade in tamil

ஸ்டேப் -2

ஆளி விதை கொதித்து அதன் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். 

ஸ்டேப் -3

இப்போது ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை சேர்த்து அதில் வடிகட்டி வைத்த ஆளி விதை தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளுங்கள்.

வெந்தயம்

 

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்..

ஸ்டேப் -4

மறுநாள் காலையில் அதனை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

 முடி அடர்த்தியாக வளர வெந்தய இயற்கை டிப்ஸ்

ஸ்டேப் -5

இப்போது அரைத்த பேஸ்டினை ஒரு துணியில் சேர்த்து நன்றாக பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்கக்கூடிய ஹேர் பேக் தயார்.!

அப்ளை செய்யும் முறை:

முதலில் தலையில் எண்ணெய் வைத்து முடியை சிக்கு இல்லாமல் சீவி எடுத்து கொள்ளுங்கள். பிறகு, முடியை இருபுறமாக பிரித்து தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை ஒவ்வொரு புறமாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 natural hair packs for thick hair in tamil

அதாவது ஹேர் பேக்கினை முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலை அலசி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் உங்கள் முடி எவ்வளவு மெல்லியதாக இருந்தாலும் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 

 

Advertisement