வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க..!

Updated On: May 2, 2023 5:14 AM
Follow Us:
Skin Whitening With Coffee Facial At Home in Tamil
---Advertisement---
Advertisement

Skin Whitening With Coffee Facial At Home 

ஹலோ நண்பர்களே..!  இந்த வெயில் காலத்தில் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்போ உங்களுக்காக அருமையான டிப்ஸை கொண்டு வந்துள்ளேன். பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் அதில் அந்தளவிற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகுக்கென்றே தனியாக அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

அதுபோல பெண்கள் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த வெயில் காலத்திலும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Skin Whitening With Coffee Facial At Home in Tamil:

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. கடலை மாவு – 2 ஸ்பூன்
  3. தேன் – 1 ஸ்பூன்
  4. தயிர் – 1 ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். பின் அதில் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கடலைமாவு எடுத்து கொள்ளவும்.

பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு காபி தூள் எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல தயிர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

skin whitening with coffee facial

இதில்  கடலைமாவு சேர்ப்பதால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது. மேலும் கரும்புள்ளிகளை போக்க உதவி செய்கிறது. காபி தூள் முக கருமையை நீக்க உதவி செய்கிறது. தயிர் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்து முக கருமையை போக்குகிறது. தேன் சருமத்தை எப்பொழுதும் மிருதுவாக வைத்து கொள்கிறது. எலுமிச்சை சாறு கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் இருக்க உதவி செய்கிறது.  

👉1 இன்ச் கூட வளராமல் முடி அப்படியே இருக்கா.. அப்போ வெந்தயத்தை இப்படி அப்ளை செய்தால் போதும்

அப்ளை செய்யும் முறை:

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். பின் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட்டு, இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

👉2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now