முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் | Tips For Glowing Face Naturally at Home in Tamil
Advertisement
மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும். முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டாம், அன்றாடம் செய்கின்ற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இயற்கையாக சருமத்தை பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய ஆறு வழிகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
முகத்தில் கை வைக்க கூடாது:
Glowing Skin Tips in Tamil: முகத்தில் அடிக்கடி கை வைப்பதை தவிர்ப்பது நல்லது. நம் கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்தில் உள்ள துளைகள் வழியாக உள்சென்று பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
உங்களுக்கு ஏற்கனவே முகப்பரு இருந்தால் அதை கிள்ள கூடாது.
தூங்கும் போது சுத்தமான தலையணையை உபயோகபடுத்துவது நல்லது, ஏனெனில் தலையில் இருக்கும் பொடுகு, எண்ணெய் தலையணையில் இருக்கும், அதில் நீங்கள் முகத்தை வைத்து உறங்கும்போது சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம்.
முகத்தை அடிக்கடி கழுவ கூடாது. சருமத்தை ஒரு நாளிற்கு இரண்டு முறை கழுவுவது நல்லது.
அழகுசாதன பொருட்களை அதிகம் உபயோகபடுத்த வேண்டாம். இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப் போட்டிருந்தால் அதை கழுவி விட்டு உறங்கவும்.
Tips For Glowing Face Naturally at Home in Tamil: உடலில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வது மிகவும் முக்கியம், அப்போது தான் முகம் நல்ல பொலிவு பெரும், அதனால் அடிக்கடி நீர் அருந்துவது மிகவும் நல்லது.
தண்ணீர் அதிகம் குடிக்க பிடிக்காதவர்கள் நெல்லிக்காய் ஜூஸ், மாதுளை ஜூஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
உணவு:
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது நம்முடைய உணவு தான், அதிகம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
Fast Food பெரும்பாலும் தவிர்த்திடுங்கள்.
சூரிய ஒளி:
Advertisement
Advertisement
Glowing Skin Tips in Tamil: வெயில் காலத்தில் sunscreen பயன்படுத்துங்கள்.
காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது அதனால் காலை, மாலை வெயில் உடலுக்கு நல்லது.
Tips for Glowing Skin in Tamil:
முகம் பொலிவு பெற இயற்கையான ஆறு வழிகள்: உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கினாலே நம் முகம் மிகவும் அழகாக இருக்கும்.
அதனால் உங்கள் உடலுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. சருமத்தில் உள்ள துவாரங்கள் திறந்து, வியர்வை வெளியேறி, இயற்கையான அழகைப் பெற வழி கிடைக்கும்.
Face Glowing Tips in Tamil:
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் நன்மையை கொடுக்கும்.
மேலே கூறப்பட்ட விஷயங்களை பின்பற்றினாலே முகம் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.
Almond Oil To Remove Dark Circles Under Eyes வணக்கம் நண்பர்களே. இக்காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம்...
Summer Care for Korean Girls at Home சாதாரணமாக சருமத்தை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கும். ஏனென்றால் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கிறது....
Summer Season Haircut Boys இந்த வெயில் காலத்தில் வெளியிலும் செல்ல முடியாது, வீட்டிலும் இருக்க முடியாது அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இந்த...
Lentil Face Beauty in Tamil நம்முடைய முன்னோர்கள் எல்லாம் உடலில் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் இயற்கையான முறையை தான் கையாண்டார்கள். மேலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு...