Hair Fall Stop Home Remedies
தலையில் கை வைத்தாலே முடி கொட்டுகிறது என்று புலம்பும் நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள். சரி இனியாவது முடியை எப்படியாவது பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்வது என்று தெரியாமலும் நிறைய நபர்கள் உள்ளார்கள். அதனால் இனி தலையில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது நீங்கள் நினைக்காமல் இருப்பதற்கான ஒரு அருமையான ஹேர் பேக் பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி ஹேர் பேக் தயார் செய்வது என்றும் அதனை எப்படி முடிக்கு அப்ளை செய்வது என்றும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தலை முடி உதிர்வதை தடுக்க:
இப்போது நாம் தயாரிக்க போகும் ஹேர் பேக் ஆனது முடி உதிர்வு, முடி திக்நஸ் போன்றவற்றைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- வெள்ளை உளுந்து- 5 ஸ்பூன்
- ஆளிவிதை- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- ஒரு துண்டு
- ஆமணக்கு எண்ணெய்- 1 ஸ்பூன்
இதையும் படியுங்கள்⇒ வெயிலில் பட்டாலும் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க இதை செஞ்சு பார்த்தீங்களா..!
முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர:
உளுந்து ஊறவைத்தல்:
முதல் நாள் இரவே உளுந்தை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். உளுந்தை நம்முடைய முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் அதில் உள்ள புரோட்டீன் தலையில் உள்ள முடிக்கு சென்று முடியை அடர்த்தியாக வளர செய்யும்.
ஆளிவிதையை கடாயில் சேர்த்தல்:
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் ஆளிவிதியினை நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஆளிவிதை ஜெல் தயாரித்தல்:
அடுத்து ஆளிவிதை கொதித்த பிறகு அதனை வடிகட்டி வைத்து வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஆளிவிதை ஜெல் தயார்.
மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல்:
அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்துள்ள வெள்ளை உளுந்து, ஆளிவிதை ஜெல் மற்றும் கற்றாழை ஜெல் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
கடைசியாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்தல்:
கடைசியாக கிண்ணத்தில் உள்ள பேஸ்ட் உடன் ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். இப்போது தலைக்கு ஹேர் பேக் தயார் ஆகிவிட்டது.
இதையும் படியுங்கள்⇒ கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..!
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையின் உச்சி முதல் நுனி வரை பொறுமையாக அப்ளை செய்து அப்படியே விட்டு விட வேண்டும்.
பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இவ்வரும் செய்வதன் மூலம் முடி உதிர்வு, முடி பாதியாக உடைதல் ஆகியவை நீங்கி முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும்.
இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை என 2 மாதம் வரை அப்ளை செய்து குளிக்க வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |