பாதியில் முடி உடைந்து உதிர்கிறதா..? இதை மட்டும் வாரத்தில் 1 முறை செய்யுங்கள்..!

Advertisement

Hair Fall Treatment at Home

சிலருக்கு தலை முடி குளிக்கும் போது, தலையில் கை வைத்து தடவும் போது கையோடு முடி உடைந்து வரும். இதனால் தலை முடி பின்னும் போது அடங்காமல் சுற்றி பறக்கும். எவ்வளவு எண்ணெய்கள் மாற்றி பார்த்தாலும் தலை முடி உதிர்ந்து கொண்டு தான் உள்ளது.

இதை தடுக்க நிறைய செயற்கை ஷாம்புகள் மற்றும் எண்ணெய்கள் என மாற்றி கொண்டு தான் வருகிறது, ஆகவே இதை தடுக்க என்ன செய்யலாம். இயற்கை மருந்துகளை விட எந்த ஒரு முயற்சியும் சிறந்தது கிடையாது. ஆகவே இதை ட்ரை பண்ணுங்க..!

Hair Fall Treatment at Home in Tamil:

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல் – 1 கொத்து
  • ஆளிவிதை – 4 டேபிள் ஸ்பூன்
  • வாழைப்பழம் – 3

செய்முறை:

Hair Fall Treatment at Home in Tamil

முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு நறுக்கி எடுத்துக் கொள்ளலாம் . அதன் பின் காடாயில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், அதன் பின் அதில் ஆளிவிதை – 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து ஜெல் மாதிரி வரும் வரை கொதிக்க விடவும்.

Hair Fall Treatment at Home in Tamil

அடுத்து அதனை எடுத்து ஆறவிட்டு வடிகட்டி அதே மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கொத்து கற்றாழையை எடுத்துக் கொள்ளவும். அதனை தோல் இல்லாமல் சீவி தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

இப்போது இந்த மூன்று பொருளையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் தண்ணீராக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!

பயன்படுத்தும் முறை:

தலை குளிக்கும் முன்பு முதல் நாள் இரவே எண்ணெய் வைத்து தலைமுடியை நன்கு சிக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் முதலில் வேரிலிருந்து ஆரம்பித்து அதன் பின் முடியின் நுனி வரை அப்ளை செய்து கொள்ளவும்.

அப்ளை செய்து முடித்து 20 நிமிடத்திற்கு பிறகு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளித்து விடலாம். இப்படி வாரத்தில் 1 அல்லது 2 முறை குளித்து வந்தால் தலை முடி உதிராமல் உடையாமல் அடர்த்தியாக வளரும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement