முடி வளர்ச்சி எண்ணெய் | Hair Growth Oil in Tamil
முடி அதிகமாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் ஆசையாக இருக்கும். ஆண்களுக்கு இருக்கின்ற முடி உதிராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முடி வளர்ச்சிக்காக கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். அது என்னென்ன பொருட்கள், எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
- வெந்தயம் – 2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 100
- ஆமணக்கு எண்ணெய் – 50
எண்ணெய் செய்முறை:
கருஞ்சீரகம் முடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். மேலும் பொடுகு பிரச்சனையை சரி செய்யும். கருஞ்சீரகம் எப்படி கருகருன்னு இருக்கின்றதோ அது போல தலையை முடியையும் கருப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.இதையும் படியுங்கள் ⇒ கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
வெந்தயத்தில் நிறைய புரோட்டீன் உள்ளது. அதனால் இதை தினமும் பயன்படுத்தும் பொழுது முடியை அடர்த்தியாக வளர செய்யும். ஆமணக்கு ஆயில் பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். மேலும் முடி வெடிப்பை தடுக்கும்.முதல் 2 தேக்கரண்டி கருஞ்சீரகம், 2 தேக்கரண்டி வெந்தயம் மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
பொடியாக அரைத்ததை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 200 ML தேங்காய் எண்ணெய், 50 ML ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
எண்ணெயை Touble Boiling முறையில் செய்ய போகின்றோம். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதன் மேலே கலந்து வைத்த எண்ணெய் பாத்திரத்தை வைக்கவும். இந்த எண்ணெய் கலர் மாறும். அப்போது வெளியே எடுத்து விடலாம்.
எண்ணெய் ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த கண்ணாடி பாட்டிலை ஒரு நாள் முழுவதும் வெயிலில் அப்படியே வைக்க வேண்டும்.
அப்ளை செய்யும் முறை:
இந்த எண்ணையை தலை முழுவதும் அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளித்து விடலாம். சைனஸ், சளி, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் குளிப்பதற்கு முன் 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கலாம்.
இதையும் படியுங்கள் ⇒ முடி உதிர்வதை நிறுத்தி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |