முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது
முடி வளருவதற்கு நீங்கள் நிறைய வகையான Hair Oil உபயோகப்படுத்திருப்பீர்கள். அதற்கு பிறகு அந்த Hair Oil-லில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்று புலம்புவீர்கள். இனி நீங்கள் புலம்பவும் வேண்டாம் பணம் செலவு செய்து Hair Oil வாங்கவும் வேண்டாம். இயற்கையான முறையில் Hair Oil தயார் செய்து 7 நாட்களில் முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இன்றைய பதிவை படுத்தி பயன்பெறுங்கள். மேலும் அந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ 100 % இயற்கையான முறையில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு இதை ட்ரை பண்ணுங்க
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கையளவு
- சின்ன வெங்காயம்- 8
- மருதாணி இலை- சிறிதளவு
- தேங்காய் எண்ணெய்- 100 கிராம்
முடி அடர்த்தியாக வளர எண்ணெய்:
ஸ்டேப்- 1
முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைய்யுங்கள். பாத்திரம் சூடானதும் 100 கிராம் தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி 5 நிமிடம் எண்ணெயை காய விடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஸ்டேப்- 3
5 நிமிடம் கழித்ததும் தேங்காய் எண்ணெயுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை அதனுடன் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கிண்டி விடுங்கள்.
ஸ்டேப்- 4
10 நிமிடதிற்கு பிறகு அடுப்பில் இருக்கும் எண்ணெயுடன் எடுத்துவைத்துள்ள வெந்தயம் மற்றும் மருதாணி இலை இரண்டையும் அதனுடன் சேர்த்து 1/2 மணி நேரம் நன்றாக கிண்டி கொண்டே இருங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக 1/2 மணி நேரத்திற்கு பிறகு எண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை நன்றாக ஆற விடுங்கள்.
இப்போது எண்ணெய் ஆறிய பிறகு அதனுடன் 200 கிராம் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முடிக்கு Hair Oil தயாராகிவிட்டது.
ஸ்டேப்- 7
நீங்கள் தயார் செய்த எண்ணெயை தினமும் உங்களுடைய முடிக்கு அப்ளை செய்து வாருங்கள். அதன் பிறகு 7 நாட்களுக்கு பிறகு முடி அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |