வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏப்புரா..! அப்படின்னு நீங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு உங்களின் தலைமுடி வளர வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: October 20, 2023 12:40 PM
Follow Us:
Hair Growth Tips at Home Naturally in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Tips at Home in Tamil

பொதுவாக பெண்களுக்கு தங்களின் அழகை  பராமரித்து வைத்து கொள்வது என்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும். அதிலும் குறிப்பாக தலைமுடியை நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்து நல்ல பலனை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் உங்களின் தலைமுடியை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதற்கான குறிப்பினை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலைமுடியை நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்த்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Hair Growth and Thickness in Tamil:

Home Remedies for Hair Growth and Thickness in Tamil

உங்களின் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் உங்களின் தலைமுடியை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதற்கான குறிப்பினை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  3. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  4. மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு 
  5. கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி அளவு 
  6. நெல்லிக்காய் – 4
  7. சின்ன வெங்காயம் – 6
  8. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் 
  9. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  10. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு 
  11. செம்பருத்தி பூ – 4
  12. வேம்பாளம் பட்டை – 1 கைப்பிடி அளவு 
  13. கற்றாழை – 1 துண்டு 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தலைமுடியை இப்படியெல்லாம் கூட வளர வைக்க முடியுமா இது தெரியாம போச்சே

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 1 கைப்பிடி அளவு வேப்பிலை, 1 கைப்பிடி அளவு மருதாணி இலை, 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி, 1 கைப்பிடி அளவு வேம்பாளம் பட்டை, 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 4 செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், மற்றும் 1 துண்டு கற்றாழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். மேலும் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 நெல்லிக்காய் மற்றும் 6 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  வடிக்கட்டி கண்ணாடி அல்லது ஏதேனும் ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தொடர்ந்து தடவி வருவதன் மூலம் உங்களின் தலைமுடி ஒரே வாரத்தில் நன்கு வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இதை மட்டும் செஞ்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க என்னடா தலைமுடி வளர்ந்துக்கிட்டே போகுதுனு

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை