தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்.. ஒரு முடி கூட கொட்டாது..!

Hair Oil for Hair fall Control and Hair Growth in Tamil

தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்.. ஒரு முடி கூட கொட்டாது..! Hair Oil for Hair fall Control and Hair Growth in Tamil..!

Hair Oil for Hair fall Control and Hair Growth in Tamil – இன்று பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. இந்த பிரச்சனை ஆண், பெண் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்குமே வருகிறது. அதிலும் டீன் ஏஜினருக்கும் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணம் ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைமுடிக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவது, தலைக்கு எண்ணெய் தடவாமல் இருப்பது. ரசாயனம் நிறைந்த பொருட்களை தலைக்கு அதிகமாக பயன்படுத்துவது, சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடல் சார்ந்த பிரச்சனைக்காக அதிகமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது என்று நிறைய காரணங்களினால் முடி உதிர்வு பிரச்சனை. இந்த முடி உதிர்வு பிரச்சனை தடுக்க எண்ணெய் தயாரிப்பு முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. இரும்பு கடாய் – ஒன்று
  2. தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
  3. சின்ன வெங்காயம் – 10
  4. கருவேப்பிலை – ஒரு கையளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 பொருள் போதும் இயற்கை முறையில் நரைமுடி கருமையாக..!

செய்முறை:Hair Oil for Hair fall Control and Hair Growth in Tamil

ஸ்டேப்: 1

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்துவிட்டு ஒன்று இரண்டாக தட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில், 250 கிராம் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

ஸ்டேப்: 3

எண்ணெய் மிதமாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை இரண்டையும் சேர்க்கவும்.

ஸ்டேப்: 4

பிறகு 15 நிமிடங்கள் எண்ணெயை நன்றாக காய்ச்ச வேண்டும், வெங்காயத்தின் நிறம் பிரவுன் நிறத்திற்கு வரும் வரை காய்ச்சவும்.

ஸ்டேப்: 5

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெயை நன்றாக ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தலைக்கு திரணமும் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை தலைக்கு தினமும் பயன்படுத்திவர ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதாவது முடி உதிவு பிரச்சனை தடுக்கப்படும்.

அதேபோல் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் இதனால் தலையில் உள்ள பொடுகு முழுமையாக நீங்கிவிடும்.

மேலும் நுனி முடிகளில் வெடிப்பு அதிகமாக இருக்கிறது என்றாலும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் நல்ல பயன்கள் கிடைக்கும்.

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர தலை முடியின் வேர் பகுதிகளுக்கு நல்ல வலிமையை சேர்க்கும், அதுமட்டும் அல்லாமல், முடி நன்கு வலிமையாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளா பெண்களின் அழகின் ரகசியம் இந்த பவுடர் தானா..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil