9 மூலிகைகள் கொண்ட ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிப்பு..!

Hair oil Preparation in Tamil

ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிப்பு..! Hair oil Preparation in Tamil..!

இன்று இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் முக்கியமாக இருக்கும் பிரச்சனை எதுவென்றால் முடி உதிர்வு பிரச்சனை தான். இந்த பிரச்சனையை சரி செய்ய கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஹேர் ஆயிலையும் பயன்படுத்துவார்கள். இது போன்று கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆயிலை தலைக்கு பயன்படுத்துவதற்கு பதில், வீட்டிலேயே மூலிகை பொருட்களை கொண்டு ஹெர்பல் ஹேர் ஆயிலை தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் தலை முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. சரி வாங்க இந்த 9 வகையான மூலிகைகளை கொண்டு ஹெர்பல் ஹேர் ஆயில் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி இலை – ஒரு கப்
  2. வேப்பிலை – ஒரு கப்
  3. கறிவேப்பிலை – ஒரு கப்
  4. மஞ்சள் கரிசலாங்கண்ணி – ஒரு கப்
  5. செம்பருத்தி இலை – ஒரு கப்
  6. செம்பருத்தி பூ – ஒரு கப்
  7. பெரிய நெல்லிக்காய் – 1/4 கிலோ
  8. கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
  9. வெந்தயம் – இரண்டு ஸ்பூன்
  10. தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

செய்முறை – Hair oil Preparation in Tamil:

மருதாணி இலை, கருவேப்பிலை, வேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை தனி தனியாக சுத்தமாக கழுவி வெயிலில் நன்றாக மூன்று நாட்கள் காயவைக்கவும்.

1/4 கிலோ நெல்லிக்காயை ஒன்று இரண்டாக கட் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அதனையும் வெயிலில் நன்றாக மூன்று நாட்கள் காயவைத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் லேசாக சூடு வந்ததும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடுங்கள்.

5 நிமிடம் கழித்து காயவைத்த அனைத்து பொருட்களையும் எண்ணெயில் சேர்த்து 10 நிமிடம் காய்ச்ச வேண்டும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து எண்ணெயை நன்றாக ஆறவைக்கவும். எண்ணெய் நன்கு ஆறியதும் ஒரு மூடி போட்டு வாணலியை மூடவும்.

பின் இரண்டு நாட்கள் எண்ணெய் அந்த இரும்பு வாணலியிலேயே ஊறட்டும். இரண்டு நாட்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து மூன்று மாதங்கள் தலைக்கு பயன்படுத்திவர தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
SHARE