Home Remedy For Cracked Heels
முகத்தை அழகாக வைத்து கொள்வதற்கு தான் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றோம். மற்ற உறுப்புகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. பாதவெடிப்பு சிறியதாக வரும் போதே அதை பார்த்து விட்டால் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் பாதவெடிப்பு முழுவதுமாக வந்து அதிலிருந்து வலி ஏற்படும் போது தான் அதனை சரி செய்வதற்காக மருந்துகளை தேடுகின்றனர். அதனால் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் பாத வெடிப்பை சரி செய்வதற்காக சில குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
பாத வெடிப்பை சரி செய்வது எப்படி.?
பாதத்தை கழுவ வேண்டும்:
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதில் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரில் பாதத்தை வைத்து 1/2 மணி நேரம் ஊற விடவும். இப்படி செய்வதால் இறந்த செல்களை புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
முகத்தில் உள்ள தேவையில்லாத முடியை எப்படி நீக்குவது.!
தேன் மற்றும் கற்றாழை:
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த, தேன் உங்கள் வெடிப்பு குதிகால் குணமடைய உதவுகிறது, மேலும் அவற்றை மென்மையாக வைத்திருக்கும்.ஒரு கிண்ணத்தில் கற்றாழை மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் கால்களை தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு தேய்த்து கொள்ளவும்.
அதன் பிறகு கலந்து வைத்த பேஸ்ட்டை பாத வெடிப்பில் அப்ளை செய்து கொள்ளவும். 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் இரவு தூங்குவதற்கு முன்பு பாத வெடிப்பில் தடவி இரவு முழுவதும் வைத்திருக்கவும். காலையில் எழுந்து கழுவி விடவும். தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனால் எண்ணெய் கால் பாதத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி கால்களை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நகம் சொத்தை, பாத வெடிப்பை குணப்படுத்த முடியும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |