ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வது நின்று நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..!

Homemade Hair Oil for Hair Fall Control in Tamil

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களது தலை முடியின் மீது அதிக கவனம் செலுத்தி அதனை நன்கு பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் அதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி நமது தலை முடியை பராமரித்து கொள்ள தான் நம்மால் முடியவில்லை. இதனால் நமது தலை முடிக்கு பல வகையான பிரச்சனைகள் வருகின்றன. அப்படி நமது தலை முடிக்கு வரும் பல வகையான பிரச்சனைகளில் இந்த தலை முடி உதிர்வும் ஒன்று. இந்த தலைமுடி உதிர்வை தடுத்து உங்கள் தலை முடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்க நீங்களும் பல வகையான முயற்சிகளை செய்தும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் மூலம் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி ஹேர் ஆயில் தயாரிக்கும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Fall Control Oil at Home in Tamil:

Hair Fall Control Oil at Home in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி ஹேர் ஆயில் தயாரிக்கும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

இந்த ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி 
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  3. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  5. கற்றாழை – 1 துண்டு 
  6. சின்ன வெங்காயம் – 5  

ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்தி முடி நீளமாக வளர வேண்டுமா அப்போ சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு மிக்சி ஜாரில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 5 சின்ன வெங்காயம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

கடாயை எடுத்து கொள்ளவும்:

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெயை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

கற்றாழையை சேர்த்து கொள்ளவும்:

இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 துண்டு கற்றாழையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் இதனை நன்கு வடிகட்டி ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் தலையில் தடவி வருவதன் மூலம் ஒரே வாரத்தில் தலை முடி உதிர்வது நின்று முடி நீளமாகவும்,  அடர்த்தியாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

எப்போ பார்த்தாலும் முடி கொட்டுதா அப்படினா இதை ட்ரை பண்ணுங்க முடி உதிர்வே இருக்காது

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil