Homemade Shampoo in Tamil
இன்றைய காலகட்டத்தில் தலை குளிக்க பயன்படுத்தும் அனைத்து ஷாம்பூகளிலும் ஏதாவது ஒரு இரசாயன பொருள் கலந்து இருக்கும். அதனை பயன்படுத்துவதால் நமது தலைமுடி காலப்போக்கில் அதிக அளவு பாதிக்கப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அழகு குறிப்பு பற்றி அறிந்துக் கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
Natural Homemade Shampoo in Tamil:
இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் ஏதாவது ஒரு இரசாயனம் கலந்துள்ளது. அதேபோல தான் நாம் தலை குளிக்க பயன்படுத்தும் ஷாம்புவிலும் ஏதாவது ஒரு இரசாயனம் கலந்து இருக்கும்.
அதனால் நாம் அதனை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வரும் பொழுது அது நமது தலைமுடிக்கு மட்டுமில்லாமல் நமது உடலுக்கும் மிகுந்த கெடுதலை விளைவிக்கிறது. அதனால் தான் நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
Homemade Herbal Shampoo in Tamil:
முதலில் இந்த ஷாம்பு தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பூவந்திக் கொட்டை (Soap Nuts) – 200 கிராம்
- காய்ந்த நெல்லிக்காய் – 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ – 10
இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் பூவந்தி கொட்டையின் உள்ளே உள்ள விதையினை நீக்கி விட்டு அதனின் தோலினை மட்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
அதேபோல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு காய்ந்த நெல்லிக்காயையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் நாம் ஊறவைத்துள்ள பூவந்திக் கொட்டை, காய்ந்த நெல்லிக்காய், 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 10 செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை வடிகட்டிக் சாற்றை மட்டும் எடுத்து மூடிபோட்ட பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்தி வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியத்துடன் வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி உதிர்வது நின்று முடி நன்கு வளர இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |