கண்களில் கருவளையம் வராமல் தடுப்பதற்கு இதை ஒருமுறை செய்து பார்த்தேலே போதும்..!

Advertisement

How to Avoid Black Spots Under Eyes

பொதுவாக மனிதர்களை பொறுத்தவரை முகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய முகத்திற்கு மேலும் அழகினை சேர்ப்பது என்றால் அது முகத்தில் இருக்கும் 2 கண்கள் மட்டுமே. அதுமட்டும் இல்லாமல் கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் இந்த உலகத்தில் எதையும் பார்க்க முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு மட்டும் கண்களை சுற்றி கருவளையம் வந்து இருக்கும். அதனை மற்றவர்கள் பார்த்தவுடன் நமக்கு கருவளையம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை வந்து விடும். உங்களுடைய யோசனைக்கு இந்த பதிவு மிகவும் ஏற்ற. இந்த பதிவில் கண்களில் வரும் கருவளையம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது.

கருவளையம் வர காரணம்:

கருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்தது.

கருவளையம் வராமல் தடுக்க என்ன செய்வது:

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்:

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

கண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.

நல்ல தூக்கம்:

நல்ல தூக்கம்

ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்.

கண்களை தேய்ப்பது:

கண்களை தேய்ப்பது

நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் அதிகமாக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதனால் கண்களில் கருவளையம் வர வழிவகுக்கிறது. அதனால் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

கண்களை மசாஜ் செய்தல்:

கண்களை மசாஜ் செய்தல்

பொதுவாக கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. ஆனால் கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.

கண் வறட்சி:

கண் வறட்சி

முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு கருவளையம் வருவதையும் தடுக்கிறது.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement