வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி கட்டுக்கடங்காமல் கருப்பாக வளர செம்பருத்தி ஒன்று போதும்..!

Updated On: April 3, 2023 11:57 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

செம்பருத்தி பூ முடி வளர

முடி வளரவில்லை என்ற கவலை பெண்கள் முதல் ஆண்கள் வரை என அனைவருக்கும் உள்ளது. அத்தகைய பிரச்சனையை சிலர் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். மற்ற சிலர் யாரிடமும் கூறாமல் அப்படியே வைத்து கொள்வார்கள். இனி நீங்கள் தலை முடி வளரவில்லை என்று கவலையும் பட வேண்டாம் மற்றும் மற்றவர்களிடம் சென்று அதற்கான தீர்வு என்னவென்று கேட்கவும் வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் அனைவருடைய வீட்டிலும் கிடைக்கக்கூடிய செம்பருத்தி பூவினை வைத்து முடியை எப்படி கருமையாக வளர வைப்பது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடி கருப்பாக அடர்த்தியாக வளர:

செம்பருத்தி பூ முடி வளர

 செம்பருத்தி பூவில் கார்போஹைட்ரேட், வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, புரதம், தியாமின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது.  

இத்தனை சத்துக்கள் நிறைந்த செம்பருத்தி பூவானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே இல்லாமல் முடி வளர்ச்சிக்கும் சிறந்த பலனை அளிக்கிறது. ஆகையால் அவற்றை எப்படி முடிக்கு பயன்படுத்துவது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி பூ- 1 கைப்பிடி அளவு
  2. செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
  3. கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
  4. கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  5. தேங்காய் துருவல்- 1/4 கப்

இதையும் படியுங்கள்⇒ பாலுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..  முகம் செம பிரைட்டா இருக்கும்.. 

How to Hair Pack in Tamil:

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் இலையினை நன்றாக சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2 

அதன் பிறகு அந்த செம்பருத்திப்பூவில் இருக்கும் காம்பினை நீக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு இயற்கையாகவே சிறந்த ஒன்றாக இருந்து வருகிறது. ஆகையால் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து அதனையும் சுத்தமாக அலசி கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 4

இப்போது ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள செம்பருத்தி பூ, இலை, கறிவேப்பிலை மற்றும் அலோவேரா ஜெல் மற்றும் தேங்காய் துருவல் இவை அனைத்தினையும் நன்றாக சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் பேக் தயார்.

பப்பாளியுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு தடவினால் போதும்..  நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக மாறிவிடுவீர்கள்..

அப்ளை செய்யும் முறை:

hair pack for hair fall and dandruff in tamil

ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பாக தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி பூ ஹேர் பேக்கினை தலையில் நன்றாக அப்ளை செய்து வைத்து விடுங்கள்.

அதன் பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் போதும் முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்து விடும். 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now