15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளர இந்த 3 பொருள் போதும்

How to Make Karunjeeragam Oil in Tamil

வெங்காயம் கருவேப்பிலை கூந்தல் எண்ணெய் செய்வது எப்படி? | How to Make Karunjeeragam Oil in Tamil

How to Make Karunjeeragam Oil in Tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் முடி வளர்ச்சிக்காக பல வகையான டிப்ஸை பற்றி பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் என்ன பார்க்க போறோம் அப்படின்னா.. முடி உதிர்வை தடுத்து, முடி அடர்த்தியாகவும்ம் நீளமாகவும், கருமையாகவும் வளர கூடிய ஒரு கூந்தல் எண்ணெய் தயார் செய்வதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். அது உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க மிகவும் பயன்படும். அதேபோல் இந்த எண்ணெய் தயாரிப்பது கூட மிகவும் எளிமையாக தான் இருக்கும். சரி வாங்க அந்த கூந்தல் எண்ணெய் எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்த்துவிடலாம்..

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
  2. சின்ன வெங்காயம் – 10
  3. கருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  4. கருவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு.

கருஞ்சீரகம் கூந்தல் எண்ணெய் செய்முறை – How to Make Karunjeeragam Oil in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் 1பி சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் இரண்டு கைப்பிடியளவு கருவேப்பிலை ஆகியவற்றை செய்து நன்கு கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.

ஸ்டேப்: 3

எண்ணெய் மிதமான சூடு வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

இப்பொழுது அரைத்து வைத்துள்ள கலவையை இவற்றில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அடுப்பு இப்பொழுது இருந்து மிதமான சூட்டில் தான் இருக்க வேண்டும். அதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

கலவையை சேர்த்த பிறகு 15 நிமிடங்கள் வரை எண்ணெய்யை காய்ச்ச வேண்டும். அடிக்கடி எண்ணெய்யை ஸ்பூன் அல்லது கரண்டியை பயன்படுத்தி கிளறி கொண்டே இருங்கள். 15 நிமிடம் கழித்து அவற்றில் உள்ள சலசலப்பு அடங்கியதும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.

ஸ்டேப்: 6

பிறகு எண்ணெய்யை நன்கு ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் சேர்த்து கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்த்தால் முதுமையில் கூட முடி கருப்பாக இருக்கும்

பயன்படுத்தும் முறை – Karunjeeragam Oil Benefits for Hair in Tamil:

இந்த எண்ணெயை கூந்தல் எண்ணெய்யாக ஒருநாள் விட்டு ஒருநாள் விட்டு தலைக்கு பயன்படுத்தி வரலாம்.

இல்லையென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை தலையில் நன்கு அப்ளை செய்து விட்டு, மறுநாள் தலை அலசலாம்.

இவ்வாறு செய்து வருவதினால் 15 நாட்களில் முடி உதிர்வு நின்று, முடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நிலமாகவும் வளர ஆரம்பிக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami