வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு போட்டால் போதும்..! முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்..!

Updated On: February 25, 2025 5:34 PM
Follow Us:
How to Make Skin Glow Naturally at Home in Tamil
---Advertisement---
Advertisement

How to Make Skin Glow Naturally at Home in Tamil

வணக்கம் நண்பர்களே. முக அழகு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியம். இதனால் பலரும் முகத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் வைத்திருக்க பல வழிகளை கையாண்டு வருகின்றார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் பயனுள்ள எளிய அழகு குறிப்பு ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது எவ்வித செலவும் செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் வைத்திருப்பது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எலுமிச்சை பழத்தை வைத்து எப்படியெல்லாம் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளலாம் என்பதை தான் பின்வருமாறு கொடுத்துள்ளோம். இதில் உள்ள வைட்டமின் சி சரும பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எலுமிச்சை பழத்தை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு நீங்கும், தழும்புகள் மறையும். முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும். சருமத்தை மென்மையாகும். எனவே, சருமத்திற்கு இத்தனை நன்மைகளை செய்யக்கூடிய எலுமிச்சை பழத்தை எப்படி முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

How to Get Glowing Skin Naturally at Home in Tamil:

How to Get Glowing Skin Naturally at Home in Tamil

பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
  • காஃபி பவுடர்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன் 

பேஸ் பேக் செய்யும் முறை:

ஸ்டேப் -1

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் பயன்படுத்தும் காஃபி பவுடரை 1 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

பிறகு, இதனுடன் 1/4 டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

 natural beauty tips for face

ஸ்டேப் -3

இப்போது இதில் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க.. பேஸ் பேக் தயார்.!

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்

அப்ளை செய்யும் முறை:

முதலில் முகத்தை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். பிறகு, தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கினை முகத்தின் எல்லா பகுதிகளிலும் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 முகம் பளபளப்பாக இருக்க

இதனை முகத்தில் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.

இம்முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now