முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் என்றும் இளமையாக இருப்பதற்கான குறிப்புகள்..!

Advertisement

முக சுருக்கம் போக

பெண்கள் மற்றும் ஆண்கள் யாராக இருந்தாலும் என்றும் இளமையான தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். வெளியில் செல்லும்போது கூட முகத்தில் வரும் சுருக்கம் மற்றும் தலையில் உள்ள நரை முடி போன்றவற்றை யாருக்கும் தெரியாதவாறு இருக்கும் படி பார்த்து கொள்வார்கள். அதிலும் சிலர் முகம் மற்றும் தலைக்கு என்று நிறைய வகையான கிரீம், ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக் என பயன்படுத்துவார்கள். ஆனால் அவை அனைத்தும் நமக்கு முழுமையான பலனை அளிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் தான் இன்றைய பதிவில் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் என்றும் இளமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

How to Remove Wrinkles From Face at Home:

முகத்தில் வரும் சுருக்கங்களை இயற்கையாக மறைய வைப்பதற்கு முதலில் வெந்தயத்தை வைத்து ஒரு Face Pack தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம்- 2 தேக்கரண்டி
  2. கஸ்தூரி மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  3. கற்றாழை- சிறிய துண்டு

இதையும் படியுங்கள்⇒ நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற நெல்லிக்காய், கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்

முக சுருக்கத்தை போக்குவது எப்படி..?

முக சுருக்கத்தை போக்குவது எப்படி

வெந்தயத்தை பவுடராக மாற்றுதல்:

வெந்தயம் முடி வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கும் நல்ல பலனை அளிக்கிறது. அதனால் முதலில் 2 தேக்கரண்டி வெந்தயம் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

கற்றாழையில் இருந்து ஜெல் தயாரித்தல்:

இப்போது நீங்கள் எடுத்துவைத்துள்ள கற்றாழையை நன்றாக தூசி எதுவும் இல்லாமல் அலசி விடுங்கள். அதன் பிறகு கற்றாழையில் இருந்து 2 தேக்கரண்டி அளவிற்கு ஜெல் எடுத்து வைத்து விடுங்கள்.

கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயம் பவுடர் சேர்த்தல்:

அடுத்ததாக ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் பவுடர் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.

கடைசியாக கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்தல்:

5 நிமிடம் கழித்த பிறகு கிண்ணத்தில் இருக்கும் பொருட்களுடன் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சத்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக 10 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கத்தினை போக்குவதற்கு Face Pack தயாராகிவிட்டது. 

இதையும் படியுங்கள்⇒ இப்படியும் கூட உதட்டை சிவப்பாகவும் மற்றும் அழகாகவும் வைக்கலாம் ட்ரை பண்ணி பாருங்கள்..!

முகத்திற்கு அப்ளை செய்யும் முறை:

 முகம் சுருக்கம் போவதற்கு என்ன செய்வது

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face Pack- ஐ முகத்தில் சுருக்கும் உள்ள இடத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவவும்.

அதன் பிறகு உங்களுடைய முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து முகம் பளிச்சென்று இளமையுடன் இருக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement