உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க உதவும் 5 எளிமையான வழிகள்..!

Advertisement

How to Remove Body Odor Permanently in Tamil

வளர்ச்சி அடைந்து வரும் உலகில் இன்றைய கால கட்டத்தில் பல வகையான நல்ல விஷயங்களும் வளர்ந்து வருகின்றது. அதே போல் நமக்கு தீமையினை அளிக்கும் பல விஷயங்களும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது. அப்படி நமக்கு தீமையினை அளிக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்று தான் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு. இதனால் நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது சருமத்திற்கு பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி நமது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த வியர்வை மற்றும் வியர்வையால் வரும் துர்நாற்றம்.

நீங்கள் சிந்தனை செய்யலாம் வியர்வை வெளியேறினால் நமது உடலுக்கு நல்லது தானே என்று. ஆம் நண்பர்களே வியர்வை நமது உடலை விட்டு வெளியேறுவது நல்லது தான். ஆனால் ஒரு சிலருக்கு வியர்வை அதிக அளவு வெளியேறும். அதனால் அவர்களின் மீது எப்பொழுதும் வியர்வை துர்நாற்றம் வரும். அது அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் தான் இன்றைய பதிவில் வியர்வை துர்நாற்றத்தை போக்க உதவும் 5 வழிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Body Odor Naturally in Tamil:

வியர்வை துர்நாற்றத்தால் பலரும் பல வகையான பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அதனால் தான் அதனை போக்க உதவும் 5 வழிகளை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தேங்காய் எண்ணெய்:

How to remove body odor naturally at home in Tamil

உங்கள் உடலில் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு அதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், உங்களின் உடல் முழுவதும் அல்லது உடலில் வியர்வை அதிக அளவு வெளியேறும் இடங்களில் நீங்கள் தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளலாம்.

இதன் நறுமணத்தால் உங்கள் வியர்வையின் துர்நாற்றம் குறையும். உடலில் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு அதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பவர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

எலுமிச்சை சாறு:

How to remove body odor naturally in Tamil

எலுமிச்சை பழம் இயற்கையாவே ஒரு கிருமிநாசினியாகும். எனவே இதனின் சாற்றினையும் உங்களின் உடலில் வியர்வை அதிக அளவு வெளியேறும் இடங்களில் நீங்கள் தடவி வருவதன் மூலம் உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் படி படியாக குறையும்.

ஏனென்றால் வியர்வை நாற்றம் ஏற்படுவதற்கு காரணம் வியர்வையில் உள்ள பாக்டிரியாக்களினால் தான் எலுமிச்சை பழம் கிருமிநாசினி இதன் சாற்றினை தடவுவதால் அந்த பாக்டிரியாக்களை அளித்து வியர்வை நாற்றத்தை குறைக்கும்.

வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க

வெந்தயம்:

How to remove body odor permanently naturally at home in Tamil

வெந்தயம் பொதுவாக ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். இந்த வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். அதிலும் குறிப்பாக ஊழலில் இருந்து வெளியேறும் நச்சுகளில் உள்ள பாக்டிரியாக்களை இது அழித்துவிடும்.

அதனால் இது உங்கள் வியர்வையில் உள்ள பாக்டிரியாக்களை அளித்து வியர்வை நாற்றத்தை குறைக்கும்.

வேப்பிலை:

Natural remedies for body odor in tamil

வேப்பிலையும் இயற்கையாவே ஒரு கிருமிநாசினியாகும். இதனை பசை போல் அரைத்து உங்களின் உடல் முழுவதும் அல்லது உடலில் வியர்வை அதிக அளவு வெளியேறும் இடங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் உங்கள் உடலில் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.

விட்ச் ஹேசல் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்:

Home remedies for body odor in Tamil

இது விட்ச் ஹேசல் என்றழைக்கப்படும் தாவரத்தின் பட்டை மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து ஆகும். இதனையும் உங்களின் உடலில் வியர்வை அதிக அளவு வெளியேறும் இடங்களில் தடவி  கொள்வதன் மூலம் உங்களின் உடலில் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கலாம்.

உங்கள் தலையில் உள்ள பொடுகினை போக்க இந்த ஒரு பொருளை பயன்படுத்தி மசாஜ் செய்து வாருங்கள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement