முடி நீளமாக வளர
முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நாம் வேலைக்கு சென்றாலும் சரி அப்படி இல்லை வீட்டில் இருந்தாலும் சரி முடி உதிர்வு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய முடி உதிர்வு என்பது ஆரம்ப காலத்தில் கொஞ்சமாக தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே போகும் நிலைமை கூட சிலருக்கு ஏற்பட்டு இருக்கும். இதை நினைத்து நீங்கள் கவலை பட வேண்டாம். நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து முடியை நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு 3 மடங்கு நீளமாக வளர என்ன செய்வது என்று தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Stop Hair Loss and Regrow Hair Naturally:
தலையில் முடி உதிர்வை நிறுத்தி முடி நீளமாக வளர கேரட் வைத்து முதலில் ஒரு ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- கேரட்- 3
- முட்டை- 2
- வாழைப்பழம்- 1
Stop Hair Loss Naturally and Regrow Hair:
ஸ்டேப்- 1
கேரட்டில் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது முடியின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது.
அதனால் நீங்கள் 3 கேரட்டை எடுத்துக்கொண்டு நன்றாக துருவி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தண்ணீர் சிறிது நேரம் கொதித்த பிறகு அதனுடன் துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 2
10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் கேரட் வெந்த பிறகு அதனை இறக்கி வைத்து கேரட்டை சிறிது நேரம் ஆறவிடுங்கள்.
ஸ்டேப்- 3
வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது முடி உதிர்வை நிறுத்தி வேரிலிருந்து முடியை வளர செய்கிறது. அதனால் 1 வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதை சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள் .
ஸ்டேப்- 4
இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆற வைத்துள்ள கேரட் இரண்டையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
அடுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்டுடன் 2 முட்டையில் இருக்கும் வெள்ளை கருவினை உடைத்து ஊற்றி அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது கேரட் ஹேர் பேக் ரெடி. (குறிப்பு: வாழைப்பழம் குளிர்ச்சி என்பதால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த வேண்டாம்)
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பு முதலில் தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதற்கு பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையின் உச்சியில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
20 நிமிடம் கழித்த பிறகு ஷாம்பு போட்டு தலை குளித்து விடுங்கள். இது மாதிரி நீங்கள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் முடி உதிர்வு விரைவில் குறைந்து உங்களுடைய முடியை நீளமாக வளர செய்யும்.
இதையும் படியுங்கள் ⇒ முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |