நரைமுடி மாறுவது எப்படி..?
தலையில் முடி வளரவில்லை என்பது ஒரு பிரச்சனை என்று நினைத்து அதனை சரி செய்து முடித்தோம் என்றால் அதற்கு அடுத்து ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. அது என்னவென்றால் வளர்ந்த முடியில் பாதி முடி நரை முடியாக மாறிவிட்டது என்ற கவலை காலம் காலமாக இருந்து வருகிறது. இத்தகைய நரை முடியினை எப்படி கருப்பாக மாற்றுவது என்று எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக என்ன என்னவோ ட்ரை செய்து அதற்கான பலன் எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் நரை முடி பிரச்சனைக்கான ஒரு தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அது என்ன என்று பதிவினை விரிவாக படித்து பயன்பெறலாம் வாருங்கள்.
How to Turn Grey Hair Back to Black Naturally:
தலையில் இருக்கும் நரை முடியினை 1 விடாமல் மீண்டும் கருப்பாக மாற்றுவதற்கு முதலில் ஹேர் டையினை தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு அதனை தலையில் முறையாக அப்ளை செய்ய வேண்டும். இந்த இரண்டினையும் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் பொடி- 1 தேக்கரண்டி
- கடுக்காய் பொடி- 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- நல்லெண்ணெய்- 50 மில்லி
- கருஞ்சீரக பொடி- 2 தேக்கரண்டி
இதையும் படியுங்கள்⇒ கற்றாழையுடன் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவுங்க…! அப்பறம் தெரியும் உங்க முகம் எப்படி வெள்ளையாக மாறியது என்று..
நரை முடி கருப்பாக இயற்கை டை:
கருவேப்பிலை பொடி தயார் செய்தல்:
கருவேப்பிலை முடி வளர்ச்சிக்கு சிறந்த ஒரு பொருளாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இது நரை முடியினை கருப்பாகவும் மாற்றி விடுகிறது.
அதனால் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை 1 சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த கருவேப்பிலையினை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல அரைத்தால் போதும் கருவேப்பிலை பொடி தயார்.
கிண்ணத்தில் பொடியினை சேர்த்தல்:
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி கருவேப்பிலை பொடி, கடுக்காய் பொடி 1 தேக்கரண்டி மற்றும் நெல்லிக்காய் பொடி 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் பொடியினை எதனால் எடுத்துக்கொள்கிறோம் என்றால் அதில் வைட்டமின் C உள்ளது. ஆகாயல் அது முடியின் வேர் வரை சென்று முடியை நன்றாக வளர செய்யும்.
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்தல்:
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள நல்லெண்ணெயினை சேர்த்து கொஞ்சம் நேரம் சூடு படுத்தி கொள்ளுங்கள்.
கடைசியாக பவுலில் நல்லெண்ணெய் சேர்த்தல்:
அடுத்து கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள பொடியுடன் சூடு படுத்தி வைத்துள்ள நல்லெண்ணெயினை சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
கருஞ்சீரக பொடி தண்ணீர்:
மீண்டும் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் வைத்து 2 தேக்கரண்டி கருஞ்சீரக பொடி சேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரை நன்றாக ஆற விடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 5 ரூபாய் செலவில் வீட்டிலே பேசியல் செய்யலாம்.! எப்படி தெரியுமா..
ஹேர் டை அப்ளை செய்தல்:
உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹைர் டையினை அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள்.
1/2 மணி நேரம் கழித்த பிறகு தலையினை அலசி விட்டு அதன் பின்பு ஷாம்பு போட்டு குளியுங்கள். இப்போது ஆற வைத்துள்ள கருஞ்சீரக தண்ணீரால் தலையினை அலசி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் 1 முறை செய்தால் போதும் தலையில் உள்ள நரை முடி கருப்பாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |