முகப்பரு உடனடியாக போக
நண்பர்களே வணக்க இன்று அனைவரின் வீட்டிலும் சின்ன Beauty பார்லர் உள்ளது. ஆமாம் ஏனென்றால் அந்த அளவிற்கு தலை முடி உதிர்வு. முக பருக்கள் வருகிறது. அதனால் அதிகளவு வீட்டில் Beauty பார்லர் இருக்கும். அந்த பருக்களை மறைக்க மேக்கப் போட்டு செல்வார்கள். எப்போதும் மேக்கப் போடுவதற்கு பதிலாக அது வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி யோசிக்கலாம். பாதி பேர் யோசிப்பீர்கள் அனைத்தும் செய்து பார்த்துவிட்டேன் பணம் தான் அதிகம் செலவு என்று யோசிப்பீர்கள். செலவுகள் செய்யாமல் வீட்டிலேயே முகப்பருக்கும், முடி உதிர்வுக்கு தீர்வு தரும். வாங்க அது எப்படி என்று தெளிவாக படித்தறிவோம்.
முகப்பரு உடனடியாக போக:
ஸ்டேப் -1
முதலில் வெற்றிலை 7 அல்லது 10 எடுத்துக்கொண்டு அதனை எடுத்து வெற்றிலை நீரில் முழுகும் வரை ஊற்றிவிடவும். நன்கு ஊற்றிய பின் வெற்றிலையை எடுத்து கையில் லேசாக மசித்து அதனை வடிகட்டி முகப்பரு இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும் இதை தினமும் செய்து வந்தால் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறந்து விடும்.
ஸ்டேப் -2
முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பு, வீக்கம், தேமல் போன்ற பிரச்சனை இருந்தால் வெற்றிலை சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து வீக்கம் போன்ற இடங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். அந்த நீரை முகத்தில் தேய்த்து முகத்தை கழுவலாம் இதனை தினமும் இரண்டு வேளை செய்து வரலாம்.
அலர்ஜி அரிப்பு நீங்க:
உடலில் எங்கு அரிப்பு ஏற்பட்டாலும் இனி கவலை வேண்டாம். வெற்றிலையை வாங்கி அதனை தண்ணீரில் போட்டு கொத்திக்கவைத்து குளிக்கும் தண்ணீரில் அதனை ஊற்றி கலந்து குளிக்கவும். இப்படி செய்வதால் உடல் ஏற்படும் சரும அலர்ஜி மற்றும் வீக்கம் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும்.
முடி அடர்த்தியாக வளர:
முடி உதிர்வதை தடுக்க வெற்றிலை ஒரு நல்ல மருந்தாக விளங்குகிறது. வெற்றிலையை நல்லெண்ணெய் சேர்த்து தடவி வந்தால் முடி உதிர்வை தடுக்கும். அல்லது வெற்றிலையை அரைத்து நல்லெண்ணெய் கலந்து தினமும் தலையில் தடவி வர முடி அடர்த்தியாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |