How to Use Curry Leaves For Grey Hair in Tamil
நம் முன்னோர்களுக்கு வயதான காலத்தில் கூட நரை முடி பிரச்சனை இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களினால் நரை முடி பிரச்சனை ஏற்ப்டுகிறது. நரை முடியை மறைப்பதற்காக செயற்கை நிறைந்த டையை பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது மட்டும் தான் நரை முடி கருப்பாக மாறும் ஆனால் நிரந்தரமாக கருப்பாக மாற்றுவதற்கு இயற்கையான முறையை கையாள வேண்டும். அப்போது தான் அதற்கான நிரந்தர தீர்வை காண முடியும். இந்த பதிவில் கருவேப்பிலையை வைத்து எப்படி வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது என தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கருவேப்பிலை எண்ணெய் பேக் :1
கறிவேப்பிலை முடி நரைப்பதை தடுக்கிறது. இவை உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் உள்ள மூலப்பொருள் முடி ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைத்து, மெலனின் உற்பத்தியை அதிகரித்து, தலைமுடிக்கு கருமையான தோற்றத்தை தருகிறது.கருவேப்பிலை எண்ணெய் தயாரிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கருவேப்பிலை இலை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும். பிறகு இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.
கருவேப்பிலை எண்ணெய் பேக் :2
கருவேப்பிலையை 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1/4 கப் கருவேப்பிலை பொடி, 1/2 கப் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.
7 நாட்களில் 3 அடி வரை முடி வளர தேங்காய் ஒன்று போதும்..! ஆச்சரியமாக இருக்கா..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |