இளநரை கருப்பாக என்ன செய்வது
நம் முன்னோர்களுக்கு வயதான காலத்தில் நரை முடி பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இன்றைய கால இளம் வயதினருக்கே வெள்ளை முடி பிரச்சனை ஏற்படுகிறது. நரை முடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் நரை முடியை மறைக்க ட்ரை பண்ணுங்க. இன்றைய பதிவில் செம்பருத்தி இலையுடன் ஒரு பொருளை கலந்து தேய்த்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும். அது எப்படி என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நரை முடியை கருப்பாக மாற்ற செம்பருத்தி:
செம்பருத்தி இலைகளை 10 எடுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை 500 ml தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை பயன்படுத்தி தலை முடி முழுவதும் அப்பளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை என்று மூன்று வாரத்திற்கு பயன்படுத்தவும். இந்த பேக்கை பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனை மற்றும் வெள்ளை முடி வராமல் தடுக்கிறது.
வெறும் 5 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாறிவிடும்..இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால்..
செம்பருத்தி பூ நரை முடியை கருப்பாக மாற்ற:
செம்பருத்தி பூ 6, செம்பருத்தி இலை 5 எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை குளிப்பதற்கு முன்னாடி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். தலைக்கு எந்த வித ஷாம்பும் பயன்படுத்த தேவையில்லை. இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வரவும். இதனை பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியடையும் மற்றும் நரை முடி பிரச்சனைக்கும் குட் பாய் சொல்லிடலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |