வெளியூர் செல்வதற்கு முன் இதை செய்யுங்கள் உங்கள் முகம் பொலிவாகவே இருக்கும்..!

Advertisement

முகம் வெள்ளையாக இருக்க என்ன செய்ய வேண்டும்

ஹாய் Friends அனைவருமே வெளியூர் பயணம் செல்வோம் அல்லவா ஆனால் ஊருக்கு போகும் போது இருக்கும் ஆர்வம் வரும் போது இருக்காது அதற்கு இரண்டு காரணம் ஒன்று ஊரை விட்டு வருகிறோம் மற்றொன்று முகம் பொலிவாக இருக்காது. அதனால் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் முகத்தை பொலிவாக வைத்துக்கொண்டால் நம்மை பார்க்கும் நபருக்கும் சரி வீட்டிலிருந்த வரும் போதும் பார்க்கும் உறவினர்களுக்கும் ஒரு வித மன நிம்மதி இருக்கும் அல்லவா..!

அனைவருமே யோசிப்பது ஒன்று தான் முகம் போகும் போது இருக்கும் பொலிவு வரும் போது இருக்கவில்லை என்று என்ன செய்தாலும் முகம் பொலிவாக இல்லை என்றால் இதை ட்ரை பண்ணுங்க முகம் எப்போது இருக்கிற பொலிவு இருக்கும்..!

Mugam Vellaiyaga Tips in Tamil:

வீட்டில் இருக்க கூடிய பொருள் போதுமே உங்கள் முகம் அழகு பெறவும் பொலிவு பெறவும் அருமையான வழிகளை தரும். ஆகவே உங்கள் வீட்டில் இருக்கும் கடலைமாவை எடுத்துக்கொள்ளவும். அளவு 1/2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளவும்.

பின்பு முல்தானி மெட்டி உங்களுக்கு நன்றாக தெரியும் அதனையும் 1/2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பின்பு இரண்டு பொருட்களுடன் தூய்மையான தேன் இல்லையென்றால் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளவும். இரண்டில் எது உங்களுக்கு கிடைக்குமோ அதனை எடுத்துகொள்ளவும்.

அதனுடன் தேயிலை 1/2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதை எடுத்துக்கொள்கிறோம் என்று யோசிப்பீர்கள் ஆனால் தேயிலையில் தான் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. அதனால் முகத்தில் சேர்த்துக்கொண்டால் முகம் மிருதுவாக இருக்கும் கருவளையம் இருந்தால் அது மறைந்து விடும்.

இதை அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் ஊறவிடவும். அதன் பின் உங்களுடைய முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டு பின்பு இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி வரவும். நன்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும்.

அதேபோல் முகத்தில் கருவளையம், மூக்கின் ஓரத்தில் இருக்கும் கருவளையம், உதட்டிற்கு கீழ் இருக்கும் இடத்தில் சிலருக்கு கருமையாக இருக்கும். அதனை தேய்த்தாலும் போகாது. அதனால் முகத்தில் அந்த இடத்தில் இந்த பேஸ் பேக்கை போட்டு சிறிது நேரம் காய வைத்து அதன்பின் முகத்தை கழுவினாலும் அந்த கருமை மறைந்து விடும்.

அதேபோல் வெளியூர்களுக்கு செல்லுவதற்கு முன் முகத்தை இந்த பேஸ் பேக் போட்டால் முகம் எப்போது போல் பொலிவாகவே இருக்கும்.

இதையும் பயன்படுத்திக்கொள்ளவும் 👉👉 காசு கொடுத்து பேஷியல் செய்வதை விட இந்த பேஷியல் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement