கை முட்டி கருமை நீங்க | கால் முட்டி கருமை நீங்க
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அழகை மேம்படுத்துவதில் அக்கறை அதிகம் செலுத்துகின்றனர். ஆனால் கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் இருக்கும் கருமையை மறந்து விடுகிறார்கள். இதனால் அந்த பகுதி மிகவும் கருத்து அசிங்கமாகிவிடும். சில நபர்கள் இந்த கருமை நிறத்தை பார்த்து கவலை அடைவார்கள். கவலை அடைவதோடு இல்லாமல் அதற்கான டிப்ஸையும் பார்த்து அப்ளை செய்து கொண்டே இருப்பார்கள். வாங்க இந்த பதிவில் கருமை நிறம் மாறுவதற்கு சில ஐடியாக்களை படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ கருப்பான உதடுகள் உள்ளதா? ஆண்கள் பெண்கள் இருவருமே இதை ட்ரை பண்ணுங்க
டிப்ஸ்:1
முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை கருமை நிறம் உள்ள இடத்தை சோப்பை பயன்படுத்தி நன்கு தேயுங்கள். பிறகு பாதி எலும்பிச்சை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். பின் இந்த எலும்பிச்சை பழத்தை கருமை நிறம் படிந்த இடத்தில் வைத்து தேயுங்கள். ஒரு 5 நிமிடம் வரை அந்த இடத்தில் மசாஜ் செய்யுங்கள். பிறகு அந்த இடத்தை கழுவி விடுங்கள்.
டிப்ஸ்:2
ஒரு கேரட் எடுத்து அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்து வைத்த கேரட்டை வடிகட்டியில் வைத்து வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் பாதி எலும்பிச்சை பழத்தை எடுத்து கலந்து வைத்த பேஸ்ட்டை தடவ வேண்டும். பின் இந்த எலும்பிச்சை பழத்தை கருமை நிறம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். ஒரு 10 நிமிடம் அப்படியே மசாஜ் செய்யுங்கள். பிறகு தண்ணீர் பயன்படுத்தி கழுவி விடுங்கள்.
டிப்ஸ்:3
ஒரு கிண்ணத்தில் தயிர் 1 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும். பின் அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். பின் கருமை நிறம் படிந்த இடத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். பிறகு ஒரு 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பிறகு தண்ணீர் பயன்படுத்தி கழுவி விடுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்துங்கள். எந்த ஒரு குறிப்பையும் பயன்படுத்தியவுடன் ரிசல்ட் வராது. அதனால் தொடர்ந்து அப்பளை செய்யுங்கள் விரைவில் கருமை நிறம் மறைந்துவிடும்.
உங்களது உடம்பில் எங்கெல்லம் கருமை நிறம் இருக்கிறதோ அந்த இடத்திலும் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |