நரை முடி வராமல் தடுக்க| Narai Mudi Varamal Thadukka
நரைமுடி என்பது முன்னாடியெல்லாம் வயதானால் தான் ஏற்படும். ஆனால் இப்போது அப்படியில்லை இளம் வயதினருக்கே நரைமுடி ஏற்படுகிறது. நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி கருப்பாக மாற்றி விடுவீர்கள். ஆனால் இதன் காரணமாக நாளடைவில் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் டையை பயன்படுத்திய கொஞ்ச நாட்களிலே மறுபடியும் வெள்ளை முடி எட்டிப்பார்க்கும். நிரந்தரமாக வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இயற்கை முறையை கையாளுங்கள்.
ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:
- கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி
- மருதாணி பொடி – 2 தேக்கரண்டி
ஹேர் டை செய்முறை:
கரிசலாங்கண்ணி 1 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் 2 அல்லது 3 தடவை கழுவி மிக்சி ஜாரில் அரைத்து கொள்ளவும்.
கரிசலாங்கண்ணி சேர்ப்பதால் நரை முடியை கருப்பாக மாற்றும். பொடுகு பிரச்சனையை சரி செய்யும். முடி ஷைனிங் ஆக வைத்திருக்கும். இது முடியை Strong வைத்திருக்க உதவுகிறது.கரிசலாங்கண்ணி அரைத்த விழுதை வடிகட்டியை வைத்து வடிகட்டி சக்கை இல்லாமல் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி 4 தேக்கரண்டி, கரிசலாங்கண்ணி சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும். கட்டி இல்லாமல் பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ முடி உதிர்வதை நிறுத்தி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு பொருள் போதும்..!
அப்ளை செய்யும் முறை:
இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன் தலை முடியை சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கரிசலாங்கண்ணி ஹேர் பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் தலையில் அப்படியே இருக்கட்டும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசி கொள்ளவும்.
இயற்கை முறையில் அப்ளை செய்வதால் உடனே ரிசல்ட்டை எதிர்ப்பார்க்க கூடாது. தொடர்ந்து வாரத்தில் ஒரு நாள் என்று 3 மாதத்திற்கு அப்ளை செய்தால் நிரந்தரமாக வெள்ளை முடியை கருப்பாக மாற்றிவிடும்.
முதல் தடவை அப்ளை செய்யும் போது பிரவுன் கலராக வரும். மறுபடியும் மறுபடியும் அப்ளை செய்யும் போது நிரந்தரமாக முடியின் வேரிலுருந்தே கருப்பாக மாற்றிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ 30 நாள் CHALLENGE, குச்சி மாதிரி உள்ள முடியை அடர்த்தியாக வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |