2 நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளி காணாமல் போக இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Karumpulli Neenga Tips

ஆண் பெண் இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முகத்தில் பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்ற நோக்கத்தில் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்கள். அதனால் மேலும் முகத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பருக்கள் முகத்தில் இருந்து மறைந்தாலும் கரும்புள்ளிகள் மறையவே இல்லை என்று சொல்பவர்களுக்கு தான் இந்த பதிவு. வாங்க நண்பர்களே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

கரும்புள்ளிகள் நீங்க என்ன செய்ய வேண்டும்..? 

கரும்புள்ளிகள் நீங்க என்ன செய்ய வேண்டும்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ் -1 

கரும்புள்ளிகள் நீங்க என்ன செய்ய வேண்டும்

 1. தக்காளி – 1
 2. உருளைக்கிழங்கு – 1
 • ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை சீவி எடுத்து கொள்ளுங்கள். பின் ஒரு மிக்சி ஜாரில் 1 தக்காளி மற்றும் சீவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
 • பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி கொள்ளுங்கள். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
 • இதை முகம் மட்டுமில்லாமல், கழுத்தில் இருக்கும் கருமை, கை கால் முட்டிகளில் இருக்கும் கருமை என்று அனைத்திற்கும் போடலாம். தக்காளியில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் இது கருமையை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..!

டிப்ஸ் -2

எலுமிச்சை சாறு தேன்

 1. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
 2. தேன் – 1 ஸ்பூன்
 • ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இதை முகத்தில் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி கொள்ளுங்கள்.
 • பின் 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை மறையும். முகம் பளபளப்பாக இருக்கும்.

டிப்ஸ் -3 

Karumpulli Neenga

 1. வேப்பிலை – 3 கொத்து
 2. தயிர் – 1 ஸ்பூன்
 3. கடலைமாவு – 1 ஸ்பூன்
 • வேப்பிலை தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
 • பின் அதை ஒரு கிண்ணத்தில் அரைத்த வேப்பிலையை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் கடலைமாவு 1 ஸ்பூன் மற்றும் தயிர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி கொள்ளுங்கள். 20 நிமிடம் முகத்தில் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ள வேண்டும். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வாருங்கள்.
 • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், கருவளையம் மற்றும் பருக்களால் ஏற்பட்ட குழிகள் மறைய தொடங்கும். முகம் பொலிவுடன் இருக்கும்.
மூன்று நாட்களில் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு இதை ட்ரை பண்ணுங்க.!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement