முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு வீட்டு வைத்தியம் | Home Remedy For Hair Growth
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்தினால் நாளடைவில் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
குறிப்பு:1
கறிவேப்பிலையில் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகப்படுத்த கூடிய தன்மையை கொண்டுள்ளது. வெங்காயம் முடி வளர்ச்சிக்கும், புதிய முடி வளர வைக்கவும் உதவுகிறது. மேலும் பொடுகு பிரச்சனையிலுருந்து விடுவித்து முடி அடர்த்தியாக வளர உதவி செய்கிறது.
உங்கள் முடிக்கு தேவையான அளவு கருவேப்பிலை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின் அதே மிக்சி ஜாரில் 1 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த வெங்காயத்தை வடிகட்டி சாறை மட்டும் எடுத்து கொள்ளவும்.
அரைத்த கருவேப்பிலையுடன் வெங்காய சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முடியின் ஒவ்வொரு பகுதியாக எடுத்து முடி முழுவதும் தடவவும். தலையில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளித்து விடவும்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் அப்ளை செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.
இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..!
குறிப்பு -2
மிக்சி ஜாரில் கருவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்த கருவேப்பிலையை சேர்க்கவும். எண்ணெயின் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இரவு முழுவதும் எண்ணெய் கடாயிலே அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் காட்டன் துணியை வைத்து எண்ணெயை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் தேய்ப்பது போல தினமும் தேய்த்து வந்தாலே முடி அடர்த்தியாக வளரும்.
இதையும் படியுங்கள் ⇒ நிரந்தரமாக நரை முடி மறைய இந்த ஒரு எண்ணெயை மட்டும் தடவுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |