கேரள பெண்களின் முடி ரகசியம்
நாம் எப்போதும் நம்முடைய முடியை பற்றி நினைப்பதை விட மற்றவர்கள் முடியை பற்றி தான் நினைத்து கொண்டிருப்போம். எதனால் அப்படி என்றால் நாமும் எவ்வளவோ நம்முடைய முடிக்காக ட்ரை செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நமக்கு முடி வளரவில்லை அவர்களுக்கு மட்டும் எப்படி வளர்கிறது என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக என்னவென்றால் கேரள பெண்களின் முடியை பார்த்தால் மிகவும் நமக்கு ஆசையாக இருக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு முடியை அழகாகவும் மற்றும் நீளமாகவும் வளர்த்து பராமரித்து செய்து வைத்து இருப்பீர்கள். உங்களுக்கு கேரள பெண்களின் முடி ரகசியத்தை தெரிந்துக்கொண்டு முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வைக்க வேண்டும் என்றால் இன்றைய பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கேரள பெண்களின் முடி ரகசியம் என்ன..?
கேரள பெண்களின் முடியை போல உங்களுடைய முடியும் வளர வேண்டும் என்றால் அதற்கு முதலில் இயற்கையான முறையில் ஒரு எண்ணெய் தயார் செய்ய வேண்டும். அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- கற்றாழை ஜெல்- 3 தேக்கரண்டி
- செம்பருத்தி பூ- 4
- சின்ன வெங்காயம்- 10
- மிளகு- 10
- தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர்
How to Make Hair Growth Oil at Home:
வெந்தயம்:
முதலில் வெந்தயம் 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்தல்:
4 மணி நேரம் கழித்த பிறகு ஊற வைத்துள்ள வெந்தயம், 1 கைப்பிடி கருவேப்பிலை மற்றும் 4 செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக சிறிது நேரம் அரைத்து விடுங்கள்.
கற்றாழை சேர்த்தல்:
கற்றாழை மற்றும் சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நமது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் நரை முடி எதுவும் வராமல் இருக்க உதவும்.அதனால் கற்றாழை ஜெல் 3 தேக்கரண்டி மற்றும் 10 சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸி ஜாரில் இருக்கும் பொருளுடன் சேர்த்து நன்றாக மீண்டும் பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் காய்ச்சும் முறை:
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
கடைசியாக மிளகு சேர்த்தல்:
10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் எண்ணெயுடன் 10 மிளகு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
மிளகு எதனால் சேர்க்கிறோம் என்றால் நாம் எண்ணெய் தயாரிக்க எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தும் நமக்கு தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் மிளகு சேர்த்தால் அதிகமாக குளிர் இல்லாமல் மிதமாக இருக்கும்.
எண்ணெய் தயார்:
நீங்கள் தயாரித்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து அதன் பிறகு அதனை வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.
கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! |
எண்ணெயை பயன்படுத்தும் முறை:
தலையில் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதன் பிறகு தயார் செய்த எண்ணெயில் இருந்து தேவையான அளவு ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனை சுடு தண்ணீரின் மேலே 5 நிமிடம் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு அந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து 25 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இதனை மட்டும் நீங்கள் செய்தால் போதும் உங்களுடைய முடியும் கிடுகிடுவென வளர்ந்து விடும். (குறிப்பு: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம்)
தலை சீவும் போது சீப்பில் முடி அதிகமாக கொட்டுதா..! அப்போ இந்த எண்ணெயை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |