வெறும் 3 பொருட்களை வைத்து வெள்ளை முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர செய்யலாம்..!

Advertisement

வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்

பொதுவாக ஆண், பெண் இருவரில் யாராக இருந்தாலும் சரி முதலில் முன்னுரிமை கொடுப்பது என்றால் அது தலை முடி மற்றும் முகம் அழகு இவை இரண்டிற்கும் தான். அதிலும் இந்த இரண்டிற்காக நிறைய செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டில் பெரும்பாலான நபர்களுக்கு தலையில் நரை முடி வருகிறது மற்றும் முடி அடர்த்தியாக வளராமல் ஒல்லியாகவே இருக்கிறது என்பது தான் பலருடைய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இத்தகைய பிரச்சனைக்காக நீங்கள் பயன்படுத்திய அனைத்தும் உங்களுக்கு முழுமையான பலனை அளித்து இருக்குமா என்று தெரியவில்லை. அதனால் இன்றைய பதிவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், முடியை அடர்த்தியாக மற்றும் நீளமாகவும் வளர செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடி கருப்பாக அடர்த்தியாக வளர:

 நரை முடியை கருமையாக்க

உங்களுக்கு இருக்கும் 3 விதமான பிரச்சனைகளை சரி செய்து தீர்வினை அளிப்பதற்கு ஒரே ஒரு ஹேர் பேக் மட்டும் தயார் செய்தால் போதும். அதனை எப்படி தயார் செய்வது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
  2. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 
  3. கரிசலாங்கண்ணி பவுடர்- 5 தேக்கரண்டி 
  4. தேங்காய் பால்- 2 தேக்கரண்டி 

இதையும் படியுங்கள்⇒ முக சுருக்கம் இல்லாமல், முகத்தை பளபளப்பாக வைத்திருக்க தயிரை எப்படி பயன்படுத்துவது..?

Grow And Gray Hair Naturally:

கருஞ்சீரகம் சேர்த்தல்:

முதலில் 2 தேக்கரண்டி கருஞ்சீரகதை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்துவைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரகத்தை நாம் வறுத்த பிறகு அதனை முடிக்கு அப்ளை செய்வதன் மூலம் நமது முடியின் கருமையை அதிகரிக்க செய்யும்.

கருவேப்பிலையை சுத்தம் செய்தல்:

கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் நமது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். அதனால் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக்கொண்டு சுத்தமான தண்ணீரில் கொள்ளுங்கள்.

பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்தல்

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அலசி வைத்துள்ள கருவேப்பிலை, வறுத்த வைத்துள்ள கருஞ்சீரகம் மற்றும் தேங்காய் பால் 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு காட்டன் துணியில் வைத்து சாறு பிழிந்து வைத்து விடுங்கள்.

கடைசியாக கரிசலாங்கண்ணி பவுடர் சேர்த்தல்:

கடைசியாக ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பவுடர் மற்றும் பிழிந்து வைத்துள்ள சாறு இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்போது ஹேர் பேக் தயார் ஆகிவிட்டது.

ஹேர் பேக் அப்ளை செய்தல்:

grow and gray hair naturally in tamil

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் தடவி அதன் பிறகு ஹேர் பேக்கை நன்றாக பொறுமையாக அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இதனை நீங்கள் வாரம் 1 முறை அப்ளை செய்தால் போதும் நரை முடியை கருப்பாக மாற்றி முடியை நன்றாக அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர செய்யும். 

இதையும் படியுங்கள்⇒ கேரள பெண்களை போல நம்முடைய தலை முடியும் கிடுகிடுவென வளர்வதற்கு இந்த ஒரு எண்ணெய் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement