பெண்கள் வீட்டில் இருந்தபடியே மீசை முடியை போக்குவதற்கு சில டிப்ஸ்

Advertisement

மீசை முடி உதிர | Meesai Mudi Poga Tips in Tamil

ஹாய் நண்பர்களே..! பெண்களுக்கு மீசை முடி உதிர்வதற்கு சில டிப்ஸை   தெரிந்துகொள்வோம். பெண்களுக்கு மீசை முடி இருந்தால் வெளியில் செல்வதற்கு கஷ்டம் படுவார்கள். பெண்களுக்கு மீசை முடி இருந்தால் கிண்டல் செய்வார்கள். இதை போக்குவதற்கு பல முறைகளை பயன்படுத்தினாலும் அந்த நேரம் மட்டும் போகும். கொஞ்ச நாளிலே திரும்ப வந்துவிடும். இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே நிரந்தரமாக போக்குவதற்கு சில டிப்ஸை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகத்திற்கு இந்த அழகையும் ஏற்படுத்துங்கள் அது என்னவென்று தெரிந்துகொள்ள கிளிக் செய்து படியுங்கள் ⇒ உங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும் புருவ முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது .?

மஞ்சள் பூசுவது:

மஞ்சள் பூசுவது

அந்த காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். அதனால் அவர்களுக்கு முகத்தில் எந்த மாதிரியான முடிகள் வளராது. ஆனால் இப்போது முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளிப்பதில்லை. அப்படி குளித்தால் நல்லா இருக்காது.

முகத்திற்கு தேய்த்து குளிக்கும் மஞ்சள் உள்ளது. அந்த மஞ்சளை கல்லில் தேய்த்தால் மஞ்சள் பேஸ்ட்டாக வரும். அதை இரவு தூங்குவதற்கு முன் உதட்டிற்கு மேல் போட வேண்டும்.

காலையில் தூங்கி எழுந்தவனுடன் கழுவி விடலாம். இதனை நீங்கள் குளிக்கும் போதும் அப்ளை செய்யலாம். இந்த மாதிரி ஒரு வாரம் செய்தால் முடிகள் வேரோடு வந்துவிடும்.

மஞ்சள் பால் பேஸ்ட்:

மஞ்சள் பால் பேஸ்ட்

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், பால் ஊற்றி நல்லா மிக்ஸ் செய்யவும். அது பேஸ்ட்டாக இருக்க வேண்டும. மஞ்சள் தூள் மிக்ஸ் ஆவதற்கு தேவையான பாலை தான் ஊற்ற வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன் இந்த பேஸ்டை மீசை முடியில் போட்டு  தூங்குங்கள். காலையில் எழுந்தவுடன் முகத்தை கழுவுங்கள். இந்த மாதிரி தினமும் செய்யுங்கள். விரைவில் மீசை முடி உதிர்ந்து விடும்.

ஜெலட்டின் பவுடர்:

ஜெலட்டின் பவுடர்

முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு துணியால் நினைத்து முகத்தில் ஒத்து கொடுங்கள். பின் ஒரு கிண்ணத்தில் ஜெலட்டின் பவுடர் தேவையான அளவு ஊற்றி கொள்ளுங்கள். அதில் நல்லா சூடான பாலை தேவையான அளவு ஊற்றவும். இரண்டையும் நல்லா கலந்து கொள்ளுங்கள்.

பின் மீசை முடியில் இந்த பேஸ்ட்டை தடவுங்கள். ஒரு 20 நிமிடம் வைத்திருங்கள். பின் முகத்தில் அணிந்திருக்கும் பேஸ் மாஸ்க்கை கீழிருந்து மேல் உறியுங்கள். இப்போது அந்த உரித்ததை பார்த்தால் முடி எல்லாம் வந்துருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ளதில் எதாவது ஒன்று செய்தலே போதும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!

 

Advertisement