7 நாட்களில் முடி அடர்த்தியாக வளர உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

Advertisement

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

ஹாய் நண்பர்களே..! பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தன்னுடைய முடி அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்றும் முடிக்காக செலவு செய்து வருவார்கள். சிலர்க்கு பார்லருக்கு சென்று முடியை பராமரிப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். ஆகவே செலவே இல்லாமல் வீட்டில் இருந்த படியே முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். வாங்க நண்பர்களே முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்று பதிவை முழுவதும் படித்து தெரிந்ததுகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ 2 ஸ்பூன் போதும் நரைமுடி கருமையாகிவிடும் 100% ஹெர்பல் ஹேர் டை..!

முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது:

7 நாட்களில் உங்களுடைய முடி கரு கருவென்று அடர்த்தியாக வளர உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Hair Pack தயார் செய்ய வேண்டும்.

Hair Pack தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • கற்றாழை – 1 துண்டு
  • துருவிய தேங்காய்- 1/2 கப் 
  • முட்டை- 1
  • காய்ச்சிய பால்- 2 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் துருவிய வைத்துள்ள தேங்காவை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் காய்ச்சிய பால் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காயில் இருந்து 1/4 கப் அளவிற்கு  சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது நீங்கள் எடுத்து வைத்துள்ள கற்றாழையை நன்றாக அலசி கொண்டு தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி அதிலிருந்து 2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்ததாக ஒரு மிக்சி ஜார் எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் நீங்கள் தேங்காய் பால் சாறை ஊற்றி மிதமான சூட்டில் சூடு படுத்தி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது நீங்கள் சூடு செய்த தேங்காய் பாலை 5 நிமிடம் ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 6

5 நிமிடம் களித்து கிண்ணத்தில் வைத்துள்ள பேஸ்ட் மற்றும் அதனுடன் ஆறவைத்துள்ள தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு மீண்டும் நன்றாக அரைத்து கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்கள் முடிக்கு Hair Pack தயார் ஆகிவிட்டது.

ஸ்டேப்- 7

இப்போது உங்களுடைய தலையில் எல்லா இடங்களிலும் தயார் செய்த ஹேர் பேக்கை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடம் களித்து தலை குளித்து விடுங்கள். வாரத்திற்கு 3 முறை இது மாதிரி செய்து குளித்தால் விரைவில் முடி அடர்த்தியாக வளர்ந்து உங்களுடைய ஆசை நிறைவேறிடும்.

தலையில் எப்போதும் நரை முடி வராமல் முடி கருகருவென்று இருக்க இதை பாருங்கள்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement