Best Hair Pack For Hair Growth at Home in Tamil
எப்போதும் தலை முடி பிரச்சனை தான் ஆண் பெண் இருவருக்கும் இருந்து வருகிறது. இதனை தீர்க்க நாமும் ஒவ்வொரு விதமான ஷாம்புகள், எண்ணெய், என அனைத்து பொருட்களையும் வாங்கி தலை முடியில் போட்டு முடியை வளர்வதை நிறுத்தி அதிகமாக கொட்டுவதற்க்கு நாமே ஒரு வழியை செய்து கொடுப்போம். இன்னும் சொல்லப்போனால் அதனாலே நமக்கு முடி வளர்ச்சி குறைந்து விடும். அதன் பின் நாம் எதுவும் தேய்க்காமல் நாம் எப்போதும் போல் தேங்காய் எண்ணெய்க்கு மாறி விடுவோம்.
நாம் எந்த பொருளை தலை முடிக்கு, முகத்திற்கு பயன்படுத்தி வந்தாலும் அதனை தொடர்ந்து செய்தால் மட்டுமே அது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். சிலருக்கு உடனடியாக ரிசல்ட் கொடுக்கும் சிலருக்கு மெதுவாக கொடுக்கும். ஆகவே முடிந்தளவு இயற்கையால் கிடைக்கும் பொருளை கொண்டு மட்டுமே தலைக்கு தேய்த்து பழகுங்கள். அந்த வகையில் இன்று நமக்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஹேர் பேக்கை ரெடி செய்யலாம்..
Best Hair Pack for Grey Hair in Tamil:
தேவையான பொருட்கள்:
- புதினா – 1 கைப்பிடி
- முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
- தேங்காய் – 1 மூடி
- முட்டை – 2
பார்லருக்கு செல்லாமல் ஹேர் Shining செய்வதற்கு ஒரு முறை இதை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..!
ஸ்டேப்: 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள புதினாவை சேர்க்கவும். புதினாவில் தலை முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்யும்.
ஸ்டேப்: 2
அடுத்து நாம் முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ளவும். இதையும் நாம் மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும். முருங்க கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, கரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது முடிக்கு நல்ல சத்துக்களை கொடுத்து முடியை வளர செய்யும்.
ஸ்டேப்: 3
அடுத்து நாம் எடுத்துக்கொள்வது தேங்காய். அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!
ஸ்டேப்: 4
அரைத்த பின் இந்த அனைத்து பொருட்களையும் காட்டன் துணியால் வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அந்த சாற்றில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் முடிக்கு நல்ல ரிசல்ட் தரும் ஹேர் பேக் ரெடி.
பயன்படுத்தும் முறை:
முதலில் தலைமுடியில் சிக்கு இல்லாமல் எண்ணெய் தடவிக்கொள்ளவும் பிறகு தலை முடியில் வேர் வரை கொண்டு அப்ளை செய்யவும். இது அப்ளை செய்வதும் மிகவும் எளிமையாக இருக்கும். 1 மணி நேரம் ஊறவிட்டு குளிக்கவும். இதனை 3 மாதம் தொடர்ந்து செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இந்த 3 பொருள் போதும் நீளமான முடி வளர்ச்சிக்கு..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |