குப்பையில் வீசி எறியும் இந்த ஒரு பொருள் போதும் முடி வளர்ச்சியை அதிகமாக்க..!

குப்பையில் இந்த பொருளை போடாதீர்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் பொதுவாக நிறைய விஷயங்களுக்கு செயற்கை மருந்துகளை நம்புவது இப்போது உள்ள பழக்கமாக மாற்றிவிட்டார்கள். அதிகளவு செயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு கெடுதல் உள்ளது என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கெடுதல் வரும் என்று தெரிந்தும் சில பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் அனைவரும் இரண்டு விஷயத்திற்கு மட்டுமே மருந்துக்கடைகளை நோக்கி படையெடுக்கிறார்கள். ஒன்று உடலுக்கு அழகு சேர்க்க இரண்டாவது தலைமுடி வளர்ச்சிக்காக. ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும் நமக்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று. சிலர் அதனை பயன்படுத்த அலுப்புபடுவார்கள். இன்று நாம் முடி வளர சில டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம். இதை செய்வதும் எளிது தான் வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்.

முடி வளர்வதற்கு டிப்ஸ்:

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
பழுத்த வாழைப்பழம் – 2 மீடியம் சைஸ் 

நம் வீட்டில் கூட இது நடந்திருக்கலாம். அது என்னவென்றால் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது என்பது அதிகளவு அனைவருக்கும் பழக்கம். அதில் சிலர் வீட்டில் சிறிய அளவு வாழைப்பழ தோல் காருப்பாக மாறிவிட்டாலோ அல்லது ஒரு மாதிரியாக நொழுநொழு வென்று இருந்தால் அதனை நாம் சாப்பிடமாட்டோம். அதனை நாம் வீசி எறிந்துவிடுவோம். ஆனால் அதில் அடங்கியுள்ள நன்மைகள் நமக்கு தெரிந்திருக்காது.

 mudi valara nattu vaithiyam

பழுத்த வாழைப்பழமானது நமக்கு அதிகளவு நன்மையை அளிக்கிறது. பழுத்த வாழைப்பழத்தை கொண்டு தலைமுடி வளர ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். அவ்வளவுதானே என்று நினைத்து அரைத்து தலையில் போடாதீர்கள். முதல் நாள் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரோடு இரண்டு (2) வாழைப்பழங்களை உரித்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெந்தயத்தோடு சேர்த்து நன்கு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

 முடி வளர்வதற்கு டிப்ஸ்

அரைத்த பின் அதில் உங்களுக்கு சூப்பரான ஹேர்பேக் கிடைக்கும். அதனை தலைமுடியில் சேர்த்து நன்றாக தடவி தலையில் ஊறும்வரை காத்திருந்து குளிக்கலாம்.

 முடி வளர்வதற்கு டிப்ஸ்

அப்படி இல்லையென்றால் ஹேர்பேக்கை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதிலிருந்து வரும் சாறை எடுத்து ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து அதனை தலையில் தடவி குளிக்கலாம் எப்போதும் போல் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லது 3 நாட்கள் கூட பயன்படுத்தலாம் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. இதன் மூலம் நல்ல முறையில் உங்களுக்கு முடி வளரும்.

தலை முடியில் உள்ள வெடிப்பு குறைய ⇒ தெரிந்துகொள்ளுங்கள் 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil