தலைமுடி நுனியில் உள்ள வெடிப்புகள் மறைய டிப்ஸ்..!

Advertisement

தலைமுடி வெடிப்பு நீங்க டிப்ஸ்..!

இப்போது எல்லாமே பெண்கள் தலைமுடி மெது எந்த ஒரு அக்கறையும் செலுத்தாமல் பலவகையான கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, ஓயில் போன்றவற்றை அதிகளவு பயன்படுத்துகின்றன இதன் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் பல பெண்கள் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கத்தியும் விட்டுவிட்டன இதன் காரணமாக தலைமுடியின் நுனியில் வெடிப்பு ஏற்படுகிறது இதன் காரணமாக முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. உண்மையாக தலை முடியின் நுனியில் வெடிப்பு இருந்தால் கண்டிப்பாக அதற்கு அப்பறம் முடி வளரவே வரலாது. ஆகவே தலையின் நுனி முடியில் மட்டும் வெடிப்புகள் ஏற்படாதவாறு பராமரியுங்கள். அப்படி வெடிப்பு ஏற்பட்டாலும் அதனை நீக்க சில இயறக்கை டிப்ஸ் இருக்கு அதை பாலோ செய்தீர்கள் என்றாலே நுனி முடியின் வெடிப்புகளை நீக்கிவிடலாம். சரி இந்த பதிவில் நுனி முடியின் வெடிப்புகள் மறைய சில டிப்ஸை இப்பொழுது நாம் பார்க்கலாம். ஆகவே பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

How to Get Rid Of Split Ends in Tamil

டிப்ஸ்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். பின் அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துகொள்ளங்கள். அதன் பிறகு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இந்த கலவையை தலை முடியின் வேர்முதல் நுனி வரை நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும் பின் மைல்டு ஷாம்பை பயன்படுத்தி தலையலசைவும. இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தீர்கள் என்றால் நுனி முடியில் இருக்கும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.

டிப்ஸ்: 2

அவகோடா மற்றும் வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஐந்து ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும், அதன் பிறகு மென்மையான ஷாம்பை பயன்படுத்தி தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் விரைவில் நுனி முடி வெடிப்புகள் காணாமல் போகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

டிப்ஸ்: 3

ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின் அதனை பாலில் கலந்து அந்த கலவையை தலையில் அப்ளை செய்யுங்கள். பின் ஒரு 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும் இவ்வாறு செய்து வந்தாலும் தலை முடி வெடிப்புகள் அகன்று போகும்.

டிப்ஸ்: 4

நன்கு பழுத்த பப்பாளியை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையை தலைமுடி முழுவதும் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தீர்கள் என்றால் தலை முடி நுனியில் ஏற்படும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.

டிப்ஸ்: 5

விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சமளவு எடுத்துக்கொள்ளுங்கள். இதனை ஒன்றைக்க கலந்து தலைமுடி முழுவதும் தடவி நன்றாக மசாச் செய்யுங்கள். பின் அரைமணி நேரம் நன்றாக தலையில் ஊறவிடுங்கள். பின் தலை முடிக்கு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தீர்கள் என்றால் தலை முடி நுனியில் ஏற்படும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil
Advertisement