5 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருப்பு நீங்கி முகம் அழகில் பளபளக்க இதை பாருங்கள்..!

Advertisement

முகத்தில் உள்ள கருமை நீங்க

ஹாய் நண்பர்களே..! எவ்வளவு தான் நாம் அழகாக இருந்தாலும் முகத்தில் இருக்கும் கருமை அனைவருக்கும் ஒரு பெரிய தொல்லையாக இருக்கிறது. முகத்தில் உள்ள கருமை நீங்க மேக்கப் போட்டாலும் அது எளிதில் மறைவது இல்லை. எனவே இனி முகத்தில் உள்ள கருமை நீங்க 1 ரூபாய் கூட செலவு செய்யவேண்டியது இல்லை. வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கருமை நீங்க அழகில் பளபளக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இன்றைய அழகு குறிப்பு பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ வெளியில் செல்வதற்கு முன் 1 நிமிடம் இந்த Facial செய்வதால் உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும்

முகத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்ய வேண்டும்:

முகத்தில் உள்ள கருமை நீங்கள் வீட்டில் உள்ள  3 பொருட்கள் போதும். அது என்னென்ன பொருட்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உருளைக்கிழங்கு- 2
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  • காய்ச்சிய பால்- 1/2 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் இரண்டு உருளைகிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அதனுடைய தோலை நீக்கி விடுங்கள். இப்போது தோல் நீக்கிய உருளைக்கிழங்கை துருவி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக தோல் நீக்கிய உருளைகிழங்கை எடுத்துக்கொண்டு உங்களுடைய கைகளால் நன்றாக பிசைந்து விடுங்கள். அதன் பின் அந்த உருளைக்கிழங்கில் இருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது அந்த உருளைக்கிழங்கு சாறுடன் 1 ஸ்பூன் சுத்தமான மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் போல கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் களித்து கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1/2 ஸ்பூன் காய்ச்சிய பால் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பேஸ்டை 10 நிமிடம் ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

10 நிமிடம் களித்து உங்களுடைய முகத்தை கழுவிய பிறகு நீங்கள் தயார் செய்த பேஸ்டை முகத்தில் கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டேப்- 6

வாரத்திற்கு மூன்று முறை இது மாதிரி செய்தால் உங்களுடைய முகத்தில் உள்ள கருமை நீங்கி அழகில் முகம் பளபளக்கும் அதிசயத்தை நீங்கள் உணர்வீர்கள். (குறிப்பு: இந்த face பேக்கை மிருதுவான ஸ்கின் கொண்டவர்கள் உங்களுடைய முகத்திற்கு ஏற்றவாறு இருந்தால் போட்டு கொள்ளுங்கள்)

அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரிப்படுவீர்கள்…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement