முகத்திற்கும் அழகு தரும் முல்தானிமட்டி தலை முடி பிரச்சனைக்கும் பயன்படுகிறது..!

Advertisement

முல்தானி மெட்டி என்பது என்ன?

நண்பர்களே வணக்கம் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் ஒரு நம்பிக்கை, அது என்ன காரணம் என்று நினைப்பீர்கள் அனைவருக்கு முகம் பிரச்சனைக்கு மருந்தாக விளங்குவது முல்தானி மெட்டி ஆகும். அதனை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படதாம். அந்த வகையில் இப்போது அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை தலை முடி பிரச்சனை தான். ஆகவே அதற்கு மருந்தாக இந்த முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

முல்தானி மெட்டி பயன்படுத்தும் முறை:

இந்த முல்தானி மெட்டி என்பது ஒரு வகையான மண் ஆகும். இது களிமண் போல் இருக்கும். இது சருமத்தின் உள் பகுதி வரை சென்று முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.

இதனை முகத்திற்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று மட்டுமே தெரியும் ஆனால் இதில் தலை முடி பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது வாங்க அது எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்..!

ஸ்டேப்: 1

உங்களின் தலைக்கு தேவையான அளவிற்கு முல்தானி மெட்டியை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும்.

நிறைய அளவு தண்ணீர் சேர்த்துவிடாதீர்கள். பின்பு தலையில் தேய்க்க முடியாது.

ஸ்டேப்: 2

பின்பு குழைத்து வைத்த முல்தானி மெட்டியை தலையும் தேய்க்கவும். தேய்த்த பின் 15  நிமிடம் வரை மசாஜ் செய்யவும்.

multani mitti uses for hair in tamil

அதன் பின் அரை மணி நேரம் வரை ஊறவிடவும். அதன் பின் தலை தேய்த்து குளிக்க வழக்கம் போல் எதையும் எடுத்து செல்ல வேண்டாம். சாதாரணமாக தலையை அலசி குளித்தால் போதும்.

இப்படி குளிப்பதால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பாக்டீரியாவை அழித்துவிடும்.

முகத்திற்கும் உடலுக்கும் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அதேபோல் தலையில் வேர் வரை சென்று பொடுகை அடியோடு அகற்றிவிடும்.

எண்ணெய் பிசுபிசுப்பே இல்லாமல் மிருதுவான தலை முடியாக இருக்கும். பளபளவென்று முடி பொலிவாக ஜொலிக்கும்.

முல்தானி மெட்டியை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!
Advertisement