நலங்கு மாவு தயாரிப்பது எப்படி? | Nalangu Maavu Preparation in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக முகத்திற்கு அதிகம் செயற்கை பொருட்களை பயன்படுத்துவதினால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகள் எல்லாம் அக்காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கு ஏற்பட்டது இல்லை ஏன் தெரியுமா? நலங்கு மாவு தான். நலங்கு மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதினால் முகம் பொலிவுடனும் அழகாகவும் இருக்கும். குறிப்பாக வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றங்கள் அனைத்தும் நீங்கும். நலங்கு மாவை பயன்படுத்துவதால் எராளமான நன்மைகள் உள்ளது.. சரி இந்த பதிவில் நலங்கு மாவு தயார் செய்வது எப்படி?, நலங்கு மாவு உபயோகிக்கும் முறை மற்றும் நலங்கு மாவு நன்மைகள் என்னென்ன போன்றவற்றை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
பேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!! சந்தனம் அழகு குறிப்பு..! |
நலங்கு மாவு செய்ய தேவைப்படும் பொருட்கள் – Nalangu Maavu Ingredients in Tamil
- கடலைப் பருப்பு – 50 கிராம்
- பாசிப் பருப்பு – 50 கிராம்
- வசம்பு – 50 கிராம்
- ரோஜா மொக்கு – 50 கிராம்
- சீயக்காய் – 50 கிராம்
- அரப்புத் தூள் – 50 கிராம்
- வெட்டி வேர் – 50 கிராம்
- விலாமிச்சை வேர் – 50 கிராம்
- நன்னாரி வேர் – 50 கிராம்
- கோரைக் கிழங்கு – 50 கிராம்
- பூலாங்கிழங்கு – 50 கிராம்
- கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
- மஞ்சள் – 50 கிராம்
- ஆவாரம்பூ – 50 கிராம்
- வெந்தயம் – 50 கிராம்
- பூந்திக்கொட்டை– 50 கிராம்
கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..! |
நலங்கு மாவு செய்வது எப்படி? | Nalangu Maavu Preparation in Tamil
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகிய பொருட்கள் அனைத்தையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் காயவைத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சியிலோ அல்லது மிசினிற்கு எடுத்து சென்றோ அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து பயன்படுத்துங்கள்.
நலங்கு மாவு உபயோகிக்கும் முறை:
வாரத்தில் இரண்டு முறை நீங்கள் தயார் செய்த இந்த நலங்கு மாவினை தேவையான அளவு எடுத்து அதனுடன் காய்ச்சாத பால் சேர்த்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகவும்,மென்மையாவும் இருக்கும்..
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |