தானியங்களும் முக அழகிற்கு கைக்கொடுக்கின்றன!!!

Advertisement

Natural Beauty Tips for Face at Home in Tamil

நமது  முகத்திற்கு அழகு சேர்ப்பதில் தானியங்களும்  முக்கிய பங்கு வகுக்கின்றன. நமது அழகை பராமரிக்க பல முறைகளை நாம் ட்ரை செய்து வருகிறோம். அவற்றுள் சில முயற்சிகள் பயன் அளிக்கும். சில முயற்சிகள் பயன் அளிப்பதில்லை. இனி கவலையே வேண்டாம். உங்களுக்கு கட்டாயம் பயன்தர கூடிய அழகுக் குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இப்போது நாம் பார்க்க இருக்கும் அழகு குறிப்பு நமது வீட்டில் உள்ள தானியங்களை வைத்து எவ்வாறு நமது அழகினை மேம்படுத்தி கொள்ளலாம் என்பதனை பற்றி தான். மிக எளிய முறையில் வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பல தானியங்களை வைத்து முகத்திற்கு அழகு சேர்ப்பது பற்றிய குறிப்புகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி. சரி வாங்க என்னென்ன அளவுக்குறிப்புகள் உள்ளது என்று பார்க்கலாம்.

அரிசி மாவு அழகு குறிப்புகள்:

arisi maavu beauty tips in tamil

டிப்ஸ்  1:

 • முகத்தின் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதில் அரிசி மாவிற்கு மிகுந்த பங்குண்டு.
 • அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின் அதனை 5 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.
 • பிறகு கையில் நீரை தொட்டு கொண்டு முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீக்கப்படும். பின் முகத்தினை கழுவ வேண்டும்.
 • இது இயற்கையாக முகத்திற்கு ஸ்கரப் செய்யும் முறையாகும். இதனை 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வது நல்லது. அடிக்கடி செய்ய கூடாது.

டிப்ஸ்  2:

 • சாதம் வடித்த கஞ்சியுடன் அரிசி மாவை சேர்த்து கலந்து முகத்தில் பூச வேண்டும்.
  அதனை 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவ வேண்டும். இந்த செயல்முறை தோலை இறுகச் செய்து முகத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.

முகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..!

 Kadalai Maavu Face Pack in Tamil:

beauty tips for face

டிப்ஸ்  1:

 • கடலை மாவு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது. கொண்டை கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து சருமத்தில் பூசி கழுவலாம்.

டிப்ஸ்  2:

 • ஐந்தில் இருந்து 8 சொட்டுகள் வரை தேனை எடுத்து கடலை  மாவுடன் சேர்த்து முகத்தின் கருமையான இடங்களில் அப்ளை செய்து வந்தால் கருமை நிறம் நீங்கும்.
 • இதனை முழங்கை, முழங்கால் மற்றும் முட்டிகளில் தேய்த்து வந்தால் கருமை நிறம் போகும்.

ஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள்..!

Pachai Payaru Face Pack Tamil:

daily skin care routine at home

 • பச்சை பயிறு மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து முகத்திற்கு பேக்காக போடலாம்.
 • வெள்ளரிகாய் சாற்றை பச்சை பயிறு மாவுடன் கலந்தும் முகத்திற்கு பேக்காக பயன்படுத்தலாம்.
 • ட்ரை ஸ்கின்-க்கு பால் ஏடுடன் பச்சை பயிறு மாவு மற்றும் ஆரஞ்சிபழ சாற்றையும் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு வரலாம்.
 • இதைத்தவிர வெள்ளரி சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவது ஒன்றை சேர்ப்பதும் சருமத்திற்கு எந்த தீங்கும் செய்யாது.

கசகசா முகத்திற்கு:

natural skin care routine

பன்னீர் ரோஸ் தரும் ரகசிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக..!

 • கசகசாவில் எண்ணெய் பசை இருப்பதால் வறண்ட சருமத்தை உடையவர்களும்  வறண்ட முடியினை உடையவர்களும் இதனை பயன்படுத்துவது  மிகவும் நல்லது.
  கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமத்தை உடையவர்களுக்கு நல்ல பலன் கிடைகும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement