தினமும் வீட்டில் இந்த பேசியல் செய்யுங்கள்..! Natural skin care tips in tamil..!

Natural skin care tips in tamil

தினமும் வீட்டில் இந்த பேசியல் செய்யுங்கள்..! Natural skin care tips in tamil..!

Natural skin care tips in tamil:- வணக்கம் இன்று நாம் பெண்கள் வீட்டில் செய்ய கூடிய மிக எளிமையான பேசியல்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம். அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் பேசியல் செய்து சரும நிறத்தை அதிகரிக்கலாம். இதற்காக பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அதேபோல் கடைகளில் விற்கப்படும் பேசியல் கிரீம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இங்கு கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பேசியல் டிப்ஸையும் தினமும் பின்பற்றி வந்தாலே இயற்கையான முறையிலேயே சரும அழகை அதிகரிக்கலாம். சரி வாங்க எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய பேசியல் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

அரிசி மாவில் கூட சரும அழகை அதிகரிக்கலாம்..!

வீட்டிலேயே செய்ய கூடிய சில பேசியல்

தயிர்:

சரும ஆரோக்கியத்திற்கு தயிர் மிகவும் சிறந்த அழகு சாதன பொருளாகும். எனவே ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளுங்கள், அவற்றை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தயிரை பயன்படுத்தி சருமத்தில் மசாஜ் செய்வதினால் சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக காணப்படும்.

மசாஜ் செய்து பின் சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வரலாம் சருமம் என்றும் இளமையாக காணப்படும்.

டீத்தூள்:

கிரீன் டீத்தூள் சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்து கொள்ளும். இந்த கிரீன் டீத்தூளுடன் சில பொருட்களை கலந்து ஒரு ஃபேஷ் பேக் தயார் செய்யலாம் வாங்க.

அதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கிரீன் டீத்தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் Glycerol (கிளிசரின்) மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஷ் பேக்கை வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் என்றும் பளிச்சென்று காணப்படும்.

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..!

கற்றாழை:-

கற்றாழை சருமத்தை என்றும் மென்மையாக வைத்து கொள்ளும், மேலும் சருமத்தில் உள்ள கருமையை அகற்றும். எனவே ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.

பின் சருமத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும். இதனால் என்றும் இளமையுடன் காணப்படும்.

ஆரஞ்சு பழத்தோல்:-

சரும அழகை அதிகரிக்க ஆரஞ்சு பழத்தோல் உதவுகிறது, எனவே ஆரஞ்சு பழத்தோலை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பொடி செய்த ஆரஞ்சு பழத்தோலை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்.

அதனுடன் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் நன்கு அப்ளை செய்யுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் எனும் பளபளப்பாக காணப்படும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000