வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கழுத்து கருப்பா இருக்கா கவலை வேண்டாம்.! இதை செய்யுங்க

Updated On: August 24, 2024 1:35 PM
Follow Us:
neck black spot remove home remedies in tamil
---Advertisement---
Advertisement

Neck Black Spot Remove Home Remedies

அழகை பராமரிப்பதில் அனைவருமே அக்கறை செலுத்துகின்றனர். ஆனால் முக அழகும், தலைமுடி அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கண்ணை சுற்றி உள்ள கருவளையம், கழுத்து கருமை போன்றவற்றிற்கு அக்கறை செலுத்துவதில்லை. கழுத்தில் உள்ள கருமை அதிகமான பிறகு தான் அதனை நினைத்து கவலை படுவார்கள். அதற்காக என்ன செய்வது என்று தேடுவார்கள். இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் கழுத்து கருமையை போக்க என்ன செய்வது என்று படித்து தெரிந்து கொள்வோம்.

கழுத்து கருமையை நீக்க:

ஓட்ஸ்:

கழுத்து கருமையை நீக்க

ஓட்ஸில் ஆக்ஜினேற்ற பண்பை கொண்டுள்ளது. அதனால் சருமத்தை ஈரப்பதமாக்கவும், சுத்தப்படுத்தவும் உதவுகிறது. 

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் அதனுடன் தக்காளி சாறு சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல்  கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கழுத்து கருமையாக உள்ள இடத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவிடவும். இந்த குறிப்பை கழுத்து கருமை போகும் வரை பயன்படுத்தவும்.

ஆரஞ்சு தோல்:

கழுத்து கருமையை நீக்க

 

ஆரஞ்சு தோலில் சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உள்ளது. ஆரஞ்சு தோலை காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த ஆரஞ்சு பொடியை பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு, தேங்காய் எண்ணெய் முதல் இன்னும் சில டிப்ஸ்

எலுமிச்சை:

கழுத்து கருமையை நீக்க

எலும்பிச்சையில் ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளது. ஒரு பவுலில் எலும்பிச்சை சாறு, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

கற்றாழை:

கழுத்து கருமையை நீக்க

கற்றாழை சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. சருமத்தை வெண்மையாக்கும் பண்பை கொண்டுள்ளது. கற்றாழையின் தோலை சீவி ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். கழுத்து கருமை நீங்கும் வரை தினமும் பயன்படுத்த வேண்டும்.

உருளைக்கிழங்கு:

கழுத்து கருமையை நீக்க

உருளைக்கிழங்கு சருமத்தை சுத்தப்படுத்தும் பண்பை கொண்டுள்ளது. கருமையாக இருக்கும் பகுதிகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது. இதற்கு ஒரு பவுலில் உருளைக்கிழங்கு சாற்றை சிறிதளவு, எலும்பிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

மூக்கில் உள்ள கருமையை போக்க டிப்ஸ்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை