ஆரஞ்சு பழ தோலை வைத்து முகத்தை ஜொலிக்க வைக்க முடியுமா..?

orange peel face mask in tamil

முகம் பளபளப்பு பெற

பெண்கள் முகத்தை அழகு படுத்துவதற்காக பல முறைகளில் செலவு செய்கிறார்கள். ஆனால் இயற்கை முறையில் யாரும் செய்வதில்லை. Beauty Parlour சென்று முகத்தை அழகுபடுத்துவது நிரந்திரமில்லை, அந்த நேரத்திற்கு மட்டும் தான் முகத்தை பளபளன்னு வைத்திருக்கும். நிரந்தரமான முகம் அழகை பெறுவதற்கு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி முகத்தை அழகாக்க முடியும். அப்படி இன்றைய பதிவில் தூக்கி போடும் ஆரஞ்சு பழ தோலை வைத்து முகத்தை மட்டுமில்லை உடல் முழுவதும் எப்படி பளபளப்பாக்க எப்படி செய்வது என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ கொய்யா இலையின் முக அழகு ரகசியம் இந்த டிப்ஸ் யாருக்கு தெரியும்

முகத்தை பளபளப்பாக்க தேவையான பொருட்கள்:

  • துவரப்பருப்பு  – 1/4 கப்
  • காய்ந்த ஆரஞ்சு பழ தோல் – 1 கப்
  • காய்ந்த கேரட் – 1கப்
  • கஸ்தூரி மஞ்சள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் துவரப்பருப்பு 1/4 கப் எடுத்து கொள்ளுங்கள். பின் காய்ந்த ஆரஞ்சு பழ தோல் 1 கப் எடுத்து கொள்ளுங்கள். பின் கேரட்டை தோல் நீக்கி  நறுக்கி கொள்ளுங்கள். அதை வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள். நன்றாக காய்ந்ததும் 1 கப் எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் துவரப்பருப்பு, காய்ந்த ஆரஞ்சு பழ தோல், காய்ந்த கேரட் தோல், கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி போன்றவை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பவுடர் பதமாக அரைக்க வேண்டும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.

அப்ளை செய்யும் முறை:

தினமும் குளிப்பதற்கு முன் ரெடி செய்து வைத்துள்ள பவுடரை தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக குழைத்து கொள்ளவும். தண்ணீர் ஊற்றாமல் பால், தயிர், ரோஸ் வாட்டர்,  உருளைக்கிழங்கு சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரிக்காய் சாறு இவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

இந்த பேஸ்ட்டை உடல் முழுவதும் அப்ளை செய்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இந்த பேஸ்ட் போட்டு குளித்தவுடன் சோப்பு போட்டு குளிக்காதீர்கள். இல்லை என்னால் சோப்பு போட்டு குளிக்காமல் இருக்க முடியாது என்றால் சோப்பு போட்டு கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் போட்டு குளிக்கும் போது முடிந்தவரை சோப்பு போடாமல் குளியுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை தினமும் பயன்படுத்துங்கள். விரைவிலே மாற்றத்தை உணர்வீர்கள். முகத்தை மட்டும் அழகு ஆக்காமல் உடல் முழுவதையும் ஜொலிக்க வைக்கலாம். ஆண்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். ஆண்கள் பயன்படுத்தும் போது கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்க்காமல் பயன்படுத்தலாம்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!