பன்னீர் ரோஸ் தரும் ரகசிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக..!

Paneer Rose Beauty Tips in Tamil

Paneer Rose Beauty Tips in Tamil..! 

ஹலோ பொதுநலம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் பன்னீர் ரோஸ் தரும் ரகசிய அழகு குறிப்புகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். நம் சருமத்திற்கு இயற்கையான அழகை தரும் பொருட்கள் எது என்று நினைத்தால் அதில் முதல் இடத்தை பிடிக்கின்றன இந்த பன்னீர் ரோஜாக்கள். இந்த பன்னீர் ரோஜாக்களை வைத்து நாம் நம் அழகை எப்படி மேம்படுத்துவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. உங்கள் அழகை மேம்படுத்த பன்னீர் ரோஸ் டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்

பன்னீர் ரோஸ் தரும் ரகசிய அழகு குறிப்புகள்: 

பன்னீர் ரோஸ்

இந்த ரோஜா இதழ்கள் சருமத்தை பாதுகாக்க பயன்படுகின்றன. இவை சருமத்தை ஒளிர செய்கின்றன. இந்த ரோஜா இதழ்கள் வெயில் காலங்களில் நம்முடைய சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. இந்த பன்னீர் ரோஜாவின் இதழ்கள் நம்முடைய சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை தருகிறது.

ரோஜா இதழ்கள் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவைகள் சருமத்தை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த ரோஜா இதழ்கள் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

டிப்ஸ் -1: 

இந்த பன்னீர் ரோஜாவை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். உங்கள் முகத்தை நன்கு கழுவிய பின் இதை முகத்தில் போட வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 3 முறை செய்து வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தேனில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால் இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி இறந்த செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

டிப்ஸ் -2: 

இந்த ரோஜா இதழ்களை நன்கு கழுவி ரோஸ் வாட்டரில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் அதை அப்படியே நன்கு மை போன்று அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 முதல் 30 நிமிடம் வரை முகத்தில் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்களுக்கு ஒரு நிமிட அழகு குறிப்பு..!

டிப்ஸ் -3: 

ரோஜா இதழுடன் பால் மற்றும் சந்தனம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின் இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதுபோல செய்து வருவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைகிறது. மேலும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைய உதவுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகள் அனைத்தையுமே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே செய்து பார்க்கலாம். நல்ல தீர்வை நீங்களே உணர்வீர்கள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami