பருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்
வணக்கம் நண்பர்களே.! ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் இருப்பது மிக பெரிய பிரச்சனை. அந்த பருக்களை சும்மா விட மாட்டோம். அதில் இயற்கை குறிப்பு பயன்படுத்துவோம், இதில் போகவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்போம், இதுவும் சரியில்லை என்றால் கடைகளில் விற்கும் கிரீம்களை அப்ளை செய்வோம். ஆனால் இந்த மாதிரி குறிப்புகளை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்து விடுவீர்கள். அது என்னென்ன தவறுகள் மற்றும் பரு எதனால் வருகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
பரு வர காரணம்:
பெண்களின் முகத்தில் மாதவிடாய் வருவதற்கு முன்பு அறிகுறியாக பருக்கள் ஏற்படும். இந்த பரு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட கூடியது. மாதவிடாய் நேரத்தில் வரும் பருக்களுக்கு நாம் எந்த விதமான கிரீம்களையும் அப்ளை செய்ய தேவையில்லை. ஏனென்றால் மாதவிடாய் வந்த 7 நாட்களுக்கு பிறகு பருக்கள் மறைந்துவிடும் .இதையும் படியுங்கள் ⇒ ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கி அழகான முகம் பெற குறிப்புகள்
இன்னொரு காரணம் முகத்தில் உள்ள எண்ணெய் பசை காரணமாக பருக்கள் ஏற்படும். இந்த பருவை சரி செய்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். எண்ணெய் பசை என்று சொன்னவுடன் எண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட கூடாது என்று நினைத்து கொள்ள கூடாது. நீங்கள் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய்களை தூய்மையான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். அதிகமாக பொறித்த உணவுகள், வறுத்த சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பருக்களில் செய்ய கூடாத தவறுகள்:
பருக்கள் வந்த சில நாட்களில் அப்படியே சரி ஆகிவிடும். சில நபர்கள் முகத்தில் பரு இருப்பதை கையை வைத்து கொண்டே இருப்பார்கள். அதாவது ஒரு பரு இருந்தாலும் அதை கையை வைத்து கிள்ளி விடுவார்கள். இப்படி பருக்களை கிள்ளி விடுவதால் அந்த பரு கரும்புள்ளிகளாக மாறிவிடும். அதுமட்டுமில்லாமல் குழி போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்:
உங்களது முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் அழுக்குகள் மற்றும் தூசிகள் தங்காமல் முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும்.
நீங்கள் முகத்தில் எந்த மாதிரியான மேக்கப் அப்ளை செய்திருந்தாலும் இரவு ரிமூவ் செய்யும் போது அதற்காக எந்த கிரீம்களையும் அப்பளை செய்ய கூடாது. தேங்காய் எண்ணெயை மட்டும் அப்ளை செய்ய வேண்டும்.
உங்களது உடம்புகள் நீர்சத்து குறைபாடு இருந்தாலும் பருக்கள் ஏற்படும். அதனால் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் தாராளமாக குடிக்க வேண்டும். நீர்சத்து குறைபாட்டினால் பருக்கள் ஏற்பட்டிருந்தால் தண்ணீர் குடித்தால் சரி ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ மூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடி தீர்வு..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |