மூன்று நாட்களில் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு இதை ட்ரை பண்ணுங்க.!

pimples remove tips in tamil

முகப்பரு உடனடியாக போக

பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கும் பிரச்சனையில் முகப்பரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. முகப்பரு வந்துவிட்டாலே அதனை போக்குவதற்காக முறையை கையாள்வீர்கள். அதாவது கடைகளில் விற்கும் கிரீம்களை உபயோகப்படுத்தும் பொழுது முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். முகத்தில் எந்த பிரச்சனை ஏற்படாமல் இயற்கை முறையில் பருக்களை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

முகப்பரு போக்க இயற்கை வழிகள்:

முகப்பரு நீங்க வேப்பிலை:

முகப்பரு நீங்க வேப்பிலை

முதலில் வேப்பிலை சிறிதளவு, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பேஸ்ட்டாக அரைக்க கூடாது சிறிதளவு தண்ணீராக இருக்க வேண்டும். இந்த அரைத்த வேப்பிலையை ஒரு பாத்திரத்தில் சக்கை இல்லாமல் வடிகட்டி கொள்ளுங்கள். இதில் கஸ்தூரி மஞ்சள் தூள், நெல்லி பொடி, சிவப்பு சந்தனம் பொடி, கடுக்காய் பொடி, சந்தனம் போன்றவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் ஊற்றி கலக்காமல் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் முகத்தில் கழுவி விடுங்கள். இது போல் 3 நாட்கள் அப்பளை செய்தாலே போதும் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து விடும். 

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்

பச்சரிசி:

முகப்பரு போக்க இயற்கை வழிகள்

முதலில் 1/2 டம்ளர் பச்சரிசி எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் கழுவிய அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளுங்கள். 2 மணி நேரம் கழித்து பச்சரிசியை அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்த கலவையை வடிக்கட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய பிறகு வந்திருக்கும் பாலை மட்டும் ஒரு கிண்ணத்தில் அப்படியே கொஞ்ச நேரம் வைத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் மேலே தண்ணீராகவும் கீழே மாவாகவும் இருக்கும். இந்த மாவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

இந்த பச்சரிசி பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து காலையில் முகத்தை கழுவி விடுங்கள். இது போல் 3 நாட்கள் அப்ளை செய்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை சரி ஆகிவிடும். 

முகத்தில் இருக்க கூடிய கருவளையம் சரி ஆகுவதற்கும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். ஆனால் 3 நாட்களில் தீர்வு கிடைக்காது. 1 மாதம் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் கருவளையம் பிரச்சனை சரி ஆகிவிடும். 

வேப்பிலை மற்றும் கற்றாழை:

முகப்பரு போக்க இயற்கை வழிகள்

வேப்பிலை இலைகளை  சிறிதளவு எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இந்த வேப்பிலை விழுதுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு அப்பளை செய்து காலையில் கழுவி விடுங்கள்.

முக்கியமாக சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தும் போது கற்றாழை ஜெல் இல்லாமல் வேப்பிலையை மட்டும் அப்ளை செய்து கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள் ⇒ வாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..!

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Natural Beauty Tips