பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!

Advertisement

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் பொடுகு பிரச்சனையும் ஒன்று. தலையில் பொடுகு இருந்தாலே கை தலையில் வைத்து சொரிந்து கொண்டே தான் இருப்பார்கள். தலைமுடி கொட்டி கொண்டே இருக்கிறது என்று கவலைபடுவார்கள். அவர்கள் கவனிக்க வேண்டியது தலையில் பொடுகு இருக்கா என்று கவனிக்க வேண்டும். தலையில் பொடுகு, பேன், ஈறு பிரச்சனை இருந்தாலும் முடி கொட்டும். தலையில் பொடுகு தொல்லை ஆரம்பிக்கும் போதே சரி செய்து விடுவது நல்லது. பொடுகு பிரச்சனை சரி செய்ய கடைகளில் விற்கும் ஷாம்புகளை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நிரந்தரமாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ என்ன செய்தாலும் முடி வளரவில்லையா. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க உங்கள் முடி மற்றவர்களைவிட அதிகமாகத்தான் இருக்கும்

தயிர்:

 பொடுகு பிரச்சனை தீர

குளிப்பதற்கு முன்பு தயிரை தலையில் தேய்த்து கொள்ளவும். 1 மணி நேரம் தலையில் அப்படியே இருக்கட்டும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். இப்படி செய்வதனால் பொடுகை நீக்கி, முடியை பளபளப்பாக்கும். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இந்த குறிப்பை தவிர்த்துடுங்கள்.

வெந்தயம்:

 பொடுகு பிரச்சனை நீங்க

இரவு தூங்குவதற்கு முன் தேவையான அளவு வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து கொள்ளவும். தலையில் 1/2 மணி அப்படியே ஊறட்டும். பிறகு தலையை தேய்த்து குளிக்கலாம்.

வெங்காயம்:

 பொடுகு பிரச்சனை நீங்க

வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து கொள்ளவும். 30 நிமிடங்களுக்கு தலையில் ஊறட்டும். பிறகு தலையை தேய்த்து கொள்ளவும். இப்படி செய்வதினால் பொடுகு பிரச்சனை சரி ஆகிவிடும்.

வேப்பிலை:

 பொடுகு தொல்லை நீங்க வழிகள்

தேவையான அளவு வேப்பிலை எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பின் தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே ஊறட்டும். பிறகு தலையை தேய்த்து குளிக்கவும். இந்த மாதிரி செய்தால் தலையில் இருக்கும் பாக்ட்ரியாக்களை அளிக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

 பொடுகு நீங்க எலுமிச்சை

தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் எலும்பிச்சை சாறு எடுத்து கலந்து கொள்ளவும். பிறகு கலந்த கலவையை தலையில் தேய்த்து 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலையை தேய்த்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் முடியில் வளர்ச்சியை உண்டாக்கும். எலும்பிச்சை சாறு பொடுகை நீக்கி முடியை வளரவைக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் உங்கள் உடம்பிற்கு எது ஏற்றதோ அந்த குறிப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எதாவது ஒரு குறிப்பை பயன்படுத்தினாலே போதுமானது பொடுகு தொல்லையிலிருந்து விடுபட்டு முடி வளர்ச்சி அடையும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement