தலைமுடிக்கு உப்பு பயன்படுத்தலாமா? பயன்படுத்தக்கூடாதா?

தலைமுடிக்கு உப்பு பயன்படுத்தலாமா? பயன்படுத்தக்கூடாதா? Salt for Hair Growth in Tamil

தலைமுடி பராமரிப்பு பலர் பலவகையான பொருட்களை பயன்படுத்துகின்றன. அவையெல்லாம் நல்லதா? அல்லது கெட்டதா? என்று அறியாமலேயே பயன்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் உப்பு, கடல் உப்புக்களை உங்கள் தலைக்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மை தீமைகளை பற்றியும். உப்பை தலை முடிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொடுகு தொல்லை நீங்க:

கிருமிநாசினிப் பண்பு கொண்ட உப்பினை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு பயன்படுத்த, பாக்டீரியா தேங்குவது தடுக்கப்படுகிறது. மேலும் சரும வறட்சி காரணமாக உதிரும் செதில்கள் (பொடுகு) தடுக்கப்படுகிறது.

தலைமுடி அடர்த்தியாக:

தலைமுடிக்கு இந்த உப்பினை பயன்படுத்த உச்சந்தலையில் சேரும் கூடுதல் சருமம் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக கூடுதல் வேர் கால்களுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைப்பதோடு கூந்தல் அடர்த்தியும் அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணையுடன் இந்து ஒரு பொருளை கலந்தால் கருப்பாக மாற்றி விடலாம் 

கூந்தல் வளர்ச்சிக்கு:

கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் இந்த உப்பில் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த உப்பின் பயன்பாடு, அடர்த்தியான, உறுதியான வளர்ச்சிக்கு உதவுகிறது.

எண்ணெய் பசை பிரச்சனைக்கு:

கூந்தலில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய் பச்சையை போக்க, உப்பில் காணப்படும் ஆன்டி மைரோப்பியல் சேர்மங்கள் உதவுகிறது. அந்த வகையில் இந்த உப்பில் கூந்தலின் எண்ணெய் பிசுக்கை குறைகிறது.

மிருதுவான கூந்தலுக்கு:

கூந்தலில் தேங்கும் அதிகப்டியான எண்ணெய் பசையை முழுவதுமாக நீக்க இந்த உப்பு பயன்படும் நிலையில், உங்கள் கூந்தலுக்கு உப்பை முறையாக பயன்படுத்தி வர கூந்தல் வறட்சி நீங்குவதோடு மிருதுவான கூந்தல் பெறவும் உதவுகிறது.

உப்பை எப்படி தலைக்கு பயன்படுத்த வேண்டும்?

கூந்தலுக்கு இந்த உப்பினை ஸ்ப்ரே வடிவில் பயன்படுத்தலாம். அல்லது, உப்பினை ஹேர் பேக் வடிவிலும் கூந்தலுக்கு பயன்படுத்தி வரலாம்.

இந்த முறையில் உப்பை தலைக்கு பயன்படுத்தும் போது நீண்ட நேரம் தலையில் வைத்திருக்க கூடாது. ஆக முடிந்தவரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன் பிறகு தலையை சுத்தமாக அலசிவிடவும்.

உப்பினை தலைக்கு பயன்படுத்துவது என்பது மிகவும் நல்லது என்றாலும். அதிகமாக தலைக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அடைப்பு, இரத்த ஓட்டம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆக வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடியை வேரிலிருந்து கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
SHARE