சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள் | Shikakai Powder Ingredients in Tamil

Advertisement

சீயக்காய் பொடி அரைக்க தேவையான பொருட்கள் | Seeyakkai Powder Preparation in Tamil

Homemade Shikakai Powder in Tamil: பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு சற்று நீளமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கும். முடி கொட்டுவதற்கு பெரும்பாலான காரணம் இரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்துவதால் தான் என்றே சொல்லலாம். கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு இயற்கையாக தயாரித்த சீயக்காய் பயன்படுத்துவது சிறந்தது.

அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி சீயக்காய் தயாரிப்பது மற்றும் அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை படித்தறியலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

shikakai powder ingredients in tamil

  1. சீயக்காய் – 1 Kg
  2. அரப்பு  – 500 கிராம்
  3. பூந்திக்கொட்டை – 200 கிராம்
  4. பசலைக்கீரை – 200 கிராம்
  5. கரிசலாங்கண்ணி – 200 கிராம்
  6. பொன்னாங்கண்ணி – 200 கிராம்
  7. தூதுவளை – 50 கிராம்
  8. வல்லாரை – 50 கிராம்
  9. பச்சைப்பயறு – 400 கிராம்
  10. கருஞ்சீரகம் – 100 கிராம்
  11. வெந்தயம் – 100 கிராம்
  12. கார்போக அரிசி – 50 கிராம்
  13. வெட்டிவேர் – 50 கிராம்
  14. பன்னீர் ரோஜா – 50 கிராம்
  15. துளசி – 50 கிராம்
  16. நீலி அவுரி – 100 கிராம்
  17. ஆவாரம் பூ – 100 கிராம்
  18. வேப்பிலை – 100 கிராம்
  19. மருதாணி – 200 கிராம்
  20. கறிவேப்பிலை – 100 கிராம்
  21. பெரிய நெல்லிக்காய் – 100 கிராம்
  22. எலுமிச்சை தோல் – 15
  23. செம்பருத்தி பூ, இலை – 200 கிராம்

சீயக்காய் தூள் அரைப்பது எப்படி.?

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பாத்திரத்தில் சீயக்காய் 1 கிலோ, அரப்பு 500 கிராம் சேர்த்து ஊறவைத்த பூந்திக்கொட்டையை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதில் காயவைத்த பசலைக்கீரை 200 கிராம், காயவைத்த (நிழலில் உலர்த்தவும்) கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி 200 கிராம் சேர்த்து அரைக்கவும்.

ஸ்டேப்: 2

Herbal Hair Wash Powder Ingredients in Tamil: தூதுவளை 50 கிராம், வல்லாரை 50 கிராம், பச்சைப்பயிறு 200 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், கார்போக அரிசி 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், பன்னீர் ரோஜா 50 கிராம், துளசி 50 கிராம், நீலி அவுரி 100 கிராம் நிழலில் உலர்த்தி அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3

ஆவாரம் பூ 100 கிராம், வேப்பிலை 100 கிராம், மருதாணி 200 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், பெரிய நெல்லிக்காய் 100 கிராம், எலுமிச்சை தோல் 15, செம்பருத்தி பூ இலை 200 கிராம் சேர்த்து நிழலில் காயவைத்து அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 4

அரைத்த பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும். இந்த பௌடரை நீங்கள் சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தலையில் 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும்.

ஸ்டேப்: 5

இயற்கை முறையில் தயாரித்த இந்த பௌடரை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளரும். தலையில் உள்ள பொடுகு, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இந்த சீயக்காய் பவுடர் இருக்கும்.

அடர்த்தியாக முடி வளர.. கூந்தல் பராமரிப்பு முறை

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement